For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை படைத்த சுப்மன் கில் - சாய் சுதர்ஷன்

அகமதாபாத் : இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக செய்ய முடியாத ஒரு பிரம்மாண்ட பேட்டிங் சாதனையை செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் - சாய் சுதர்சன் ஜோடி. .

2024 ஐபிஎல் தொடரின் 59 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தா குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் என்ற நிலை இருந்தது.

IPL 2024 GT vs CSK For the first time a team player hit hundreds in an innings against CSK

இந்த நிலையில் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடினர். இருவருமே சதம் அடித்தனர். சுப்மன் கில் 55 போட்டிகளில் 104 ரன்களும், சாய் சுதர்ஷன் 51 பந்துகளில் 103 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் இரண்டு வீரர்கள் சதம் அடித்ததே இல்லை. முதல் முறையாக அந்த பிரம்மாண்ட சாதனையை செய்துள்ளது சாய் சுதர்ஷன் - சுப்மன் கில் ஜோடி. மேலும் ஐபிஎல் தொடரில் இது போல ஒரே இன்னிங்ஸில் இரண்டு வீரர்கள் சதம் அடிப்பது என்பது இது மூன்றாவது முறை ஆகும்.

முன்னதாக 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி 109 ரன்களும், ஏபி டிவில்லியர்ஸ் 129 ரன்களும் எடுத்து இருந்தனர். அதன் பின் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் சதம் அடித்தி இருந்தனர். அதன் பின் தற்போது சுப்மன் கில் - சாய் சுதர்சன் ஜோடி ஒரே இன்னிங்ஸில் இரண்டு சதம் அடித்துள்ளது.

Story first published: Friday, May 10, 2024, 23:23 [IST]
Other articles published on May 10, 2024
English summary
IPL 2024 GT vs CSK: For the first time, a team player hit hundreds in an innings against CSK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+