Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs DC - 89 ரன்களில் சுருண்ட குஜராத்.. நடப்பு சீசனில் குறைந்தபட்ச ஸ்கோர்.. டெல்லி அபார பந்துவீச்சு

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான 32 வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 89 ரன்களில் எல்லாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் குஜராத் அணி மிகக் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சில் ஈடுபட்டது. டெல்லி அணி அபாரமாக பந்து வீசி குஜராத் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. தொடக்க வீரர் கில் 8 ரன்களில் ஆட்டமிழக்க சாஹா இரண்டு ரன்களில் வெளியேறினார்.

IPL 2024 GT vs DC - Gujarat titans all out for 89 runs as their registered lowest ever total

தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் 12 ரன்களில் ரன் அவுட் ஆக அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் இரண்டு ரன்களிலும், அபிநவ் மனோகர் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஷாருக்கான் டக் அவுட் ஆக 48 ரன்கள் சேர்ப்பதற்குள் குஜராத் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதை அடுத்து ராகுல் திவாட்டியா, ரஷித் கான் ஜோடி அணியை சரிவிலிந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் திவாட்டியா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ரசித் கான் மட்டும் போராடி 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.

மோகித் சர்மா இரண்டு ரன்களிலும், நூர் அஹமத் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க குஜராத் அணி 17.3 ஓவர்கள் எல்லாம் 89 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி பந்துவீச்சில் முகேஷ் குமார் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 8 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டெப்ஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள். கலீல் அகமது மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி அடித்திருக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதுபோல் நடப்பு சீசனில் ஒரு அணி அடித்திருக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங், கேப்டன்ஷி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு இருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Story first published: Wednesday, April 17, 2024, 21:36 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+