Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிகவும் மோசமான செயல்பாடு இது.. பேட்டிங்கில் தான் கோட்டை விட்டோம்.. குஜராத் கேப்டன் சுப்மான் கில்

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியனான குஜராத் அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாபுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை வைத்தும் குஜராத் அணி தோல்வியை தழுவியது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் குஜராத் அணி, லக்னோக்கு எதிராக முதன்முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த போட்டியில் 164 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் குஜராத் அணி 130 ரன்களில் சுருண்டது.

IPL 2024 - Gujarat titans captain shubman gill says poor performance from batters cost the game

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், தங்களுடைய அணி மோசமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ஆடுகளம் நன்றாக தான் இருந்தது. ஆனால் எங்களுடைய செயல்பாடு தான் மிகவும் மோசமாக அமைந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினோம். ஆனால் நடு ஓவர்களில் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம்.

அதிலிருந்து எங்களால் மீளவே முடியவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கின்றேன். இந்த ஆடுகளத்தில் லக்னோ அணி 170,180 ரன்கள் எடுப்பார்கள் நினைத்தேன். ஆனால் அதனை விட குறைவாக தான் லக்னோ அணி எடுத்தது. இதற்கு எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டேவிட் மில்லர் ஆட்டத்தை தனியாக மாற்றக்கூடிய வீரர் தற்போது எங்களுடைய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அது கொஞ்சம் சரிவு ஏற்படுத்தி உள்ளது. இந்த இலக்கை நாங்கள் நிச்சயம் எட்டுவோம் தான் என்று நினைத்தேன். பவர்பிளேவின் கடைசி ஓவர் என்பதால் அதனை சரியாக பயன்படுத்தி ரன்கள் சேர்க்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன்.

அதற்காக அதிரடியாக ஆட முற்பட்ட போது என்னுடைய விக்கெட்டை நான் இழந்தேன். உமேஷ் யாதவ் அனுபவம் வாழ்ந்த வீரர். அவர் நன்றாக செயல்படுகிறார் எங்களுடைய பவுலர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கில் கூறியுள்ளார். தற்போது குஜராத் அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, மூன்று தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

Story first published: Monday, April 8, 2024, 6:25 [IST]
Other articles published on Apr 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+