Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய கேப்டனாக கில் எப்படி செயல்பட போகிறார்? ஹர்திக்கை மறைமுகமாக கலாய்த்த குஜராத் அணியின் நெஹ்ரா

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2022 ஆம் ஆண்டு சீசனில் புதிய அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு சென்று அதில் ஒரு முறை சாம்பியன் ஆக மாறி இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போது அவர் அங்கிருந்து கம்பியை நீட்டி மும்பை அணிக்கு மாறிவிட்டார். இதனால் மீண்டும் அணியை புதியதாக கட்டமைக்கும் முயற்சியில் குஜராத் டைட்டன்ஸ் ஈடுபட்டு வருகிறது.

IPL 2024 - Gujarat Titans Head coach Ashish Nehra excited to see Shubman gill captaincy

இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் புதிய கேப்டன் தலைமையில் எவ்வாறு அணி செயல்பட போகிறது என்பது குறித்து பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டியளித்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். கில் எவ்வாறு கேப்டனாக செயல்பட போகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்.

நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கில், எவ்வாறு செயல்பட போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாட வேண்டும் என உழைக்கும் வீரர் கில்லுக்கு எங்களுடைய அணி நிர்வாகம் முழு ஆதரவை வழங்கும். அவர் கேப்டனாக வளர நாங்கள் நிச்சயம் முயற்சி செய்வோம்.

ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக தலைமை தாங்குவதற்கு முன்பு அவர் எந்த கிரிக்கெட் போட்டியிலும் கேப்டனாக இருந்ததில்லை. இதேபோன்று ஸ்ரேயாஸ், நிதிஷ் ராணா போன்ற வீரர்களும் ஐபிஎல் தொடரில் தான் முதல்முறையாக கேப்டனாக மாறினார்கள். எனவே இது இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அனுபவமாக இருக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மேன்மேலும் வளர வேண்டும்.

இந்த சீசனில் கில் பேட்டிங்கை பற்றி எந்த குறையும் இல்லை. ஆனால் அவருடைய தலைமை குணம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதுதான் இந்த சீசனில் முக்கியம் அணியை சரியான முறையில் வழி நடத்துவதற்கு, நாங்கள் துணை நிற்போம். கில்லின் திறமை குறித்து சந்தேகப்படவே தேவையில்லை. ஒரு உத்வேகம் உள்ள வீரர்களால் தான் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும். அந்த வகையில் நன்றாக இருக்கிறார்.

ஆனால் ஒரு தலைவன் ஆக உருவாகுவது என்பது அவருடைய தனிப்பட்ட குணத்தை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.அந்த குணத்தை வளர்க்க தான் நாங்கள் துணை நிற்போம். ஹர்திக் பாண்டியா, சமி ஆகியோர் இடத்தை நிரப்புவது என்பது சுலபமான காரியம் கிடையாது. ஆனால் எங்களிடம் திறமையான இளம் வீரர்களும் சீனியர்களும் இருக்கிறார்கள்.

Story first published: Sunday, March 17, 2024, 14:45 [IST]
Other articles published on Mar 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+