For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாகப் போகும் ஹர்திக் பாண்டியா.. சோலியை முடித்த பிசிசிஐ

மும்பை : இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா, டி20 அணியின் கேப்டனாக உலக கோப்பையில் செயல்பட வாய்ப்பு உள்ளது. இது மட்டும் நடந்தால் உலக கோப்பையில் அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் கூறி வருகின்றனர்

ஒரு பேச்சுக்கு ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரின் இடையே காயமடைகிறார் என வைத்துக் கொண்டால், அப்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி ஆடும் நிலை ஏற்படும். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியையே சரியாக வழிநடத்த முடியாமல் திணறும் ஹர்திக் பாண்டியா எப்படி இந்திய அணியை வழி நடத்துவார்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

IPL 2024 Hardik Pandya is not a good choice for the Indian T20 team s vice captain

2024 டி20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ளது தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஒரு வார இடைவெளியில் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது அந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது அதில் ஹர்திக் பாண்டியாவை அணியிலேயே சேர்க்கக்கூடாது என்று சிலர் கூறி வந்தனர்.

2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு மோசமாக இருந்ததே அதற்கு காரணம். அவரை வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக கருதியை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. ஆனால் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர் பத்து போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். ஒரு ஓவருக்கு சராசரியாக 11 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். அதேபோல பேட்டிங்கில் 10 போட்டிகளில் 197 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 46 மட்டுமே.

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்ததையே பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அணியின் துணை கேப்டனாகவும் அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியிலும் சொதப்பி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது.

அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் மும்பை அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியாத நிலையில் தான் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இந்த நிலையில் அவரை இந்திய அணியின் துணை கேப்டனாக நியமித்தது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியை மோசமாக வழி நடத்தி வரும் அவர் ஒரு அவசியம் ஏற்படும் போது இந்திய அணியை எப்படி சரியாக வழி நடத்துவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரிஷப் பண்ட், பும்ரா, சூர்யகுமார் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவரை துணை கேப்டனாக அறிவித்திருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் மற்றவர்கள் சக வீரர்கள் மற்றும் மூத்த வீரர்களுடன் எளிதாக ஆலோசித்து முடிவுகளை எடுப்பார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியா மூத்த வீரர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பதில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் பாண்டியா தாமாகவே முடிவுகளை எடுத்து வருகிறார். அதனாலேயே போட்டியில் பல தவறுகளை செய்து தோல்விக்கு காரணமாகி இருக்கிறார். அந்த அளவுக்குத்தான் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி உள்ளது.

இந்த நிலையில் அவரால் எப்படி இந்திய அணியை வழிநடத்த முடியும் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவசரப்பட்டு ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ.

Story first published: Friday, May 3, 2024, 15:00 [IST]
Other articles published on May 3, 2024
English summary
IPL 2024: Hardik Pandya is not a good choice for the Indian T20 team's vice captain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+