Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - பிளே ஆப் சுற்றுக்கு செல்ல MI, RCB உள்ளிட்ட அணிகள் இன்னும் எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் முதல் பாதி முடிவடைந்து விட்டது பெரும்பான்மையான அணிகள் ஏழு லீக் போட்டிகளில் விளையாடிவிட்டன. இந்த ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா மூன்றாவது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளது.

லக்னோ ஐந்தாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது இடத்திலும், டெல்லி ஏழாம் இடத்திலும், குஜராத் எட்டாவது இடத்திலும்,பஞ்சாப் ஒன்பதாவது இடத்திலும், பெங்களூரு பத்தாவது இடத்திலும் உள்ளது. சிஎஸ்கே அணி விளையாடிய 7 போட்டிகளில் நான்கில் வெற்றி மூன்று தோல்வி என எட்டு புள்ளிகள் பெற்று 0.52 என்ற ரன் ரேட் உடன் நான்காவது இடத்தில் உள்ளது.

IPL 2024 - How many matches need to win by all 10 teams for qualifying playoff

ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகள் விளையாட வேண்டும். இதில் முடிவடைவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஏழு அல்லது எட்டு போட்டிகள் வெல்ல வேண்டும். அதன் அடிப்படையில் சிஎஸ்கே அணி அடுத்த ஏழு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணியின் உதவியும் எதிர்பாராமல் இருக்க வேண்டுமென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

அதாவது இனி சிஎஸ்கே அணி இனிவரும் ஏழு போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தான் தோற்கலாம். அதற்கு மேல் தோற்றால் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய்விடும். சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சாதகமான விஷயம் என்றால் இனி விளையாட போகும் ஏழு போட்டிகளில் நான்கு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.

இதுவரை நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் தோற்கவில்லை. இதனால் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக சென்று விடலாம். லக்னோ அணிக்கு எதிராக கடைசி போட்டிகளில் சிஎஸ்கே அணி வென்ற நிலையில் தற்போது வரும் 23ஆம் தேதி மீண்டும் சென்னை அணி லக்னோவை தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 21, 2024, 14:55 [IST]
Other articles published on Apr 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+