For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே தவறால் டி20 உலக கோப்பையில் இடம் போச்சு.. தினேஷ் கார்த்திக் செய்த மெகா சொதப்பல்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருக்கும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்து நிலையில் அவரை டி20 உலக கோப்பையில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் கேகேஆர், ஆர் சி பி அணிக்கு இடையிலான போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்த மெகா தவறு அவருடைய வாய்ப்புக்கு வேட்டு வைத்து விட்டது. ஆர் சி பி அணிக்கு வெற்றிக்கு 12 பந்துக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.

IPL 2024 - Huge Mistake by dinesh karthik costs his place in indian team for t20 world cup

அப்போது தினேஷ் கார்த்திக் 19ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தாலும் மற்ற மூன்று பந்துகளில் சிங்கிள்ஸ் ஓடாமல் கரன் சர்மாவுக்கு பேட்டிங் தராமல் நின்றார். கரண் சர்மா சரியாக அடிக்க மாட்டார் என்று எண்ணி தினேஷ் கார்த்திக் ரன்கள் ஓடாமல் மூன்று பந்துகளை வேஸ்ட் செய்தார். மேலும் சிங்கிள்ஸ் ஓடாமல் நின்றிருந்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடியும் ஏற்பட்டு கடைசி பந்தில் அவரும் ஆட்டம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது, யாருமே எதிர்பார்க்காத வகையில் கரன்சர்மா மூன்று சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. எனினும் கே கே ஆர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கரன் ஷர்மா கடைசி ஓவரில் மூன்று சிக்சர் அடித்த நிலையில் அவருக்கு 19 வது ஓவரிலே தினேஷ் கார்த்திக் வாய்ப்பு கொடுத்திருந்தால் இந்நேரம் ஆர் சி பி அணி வெற்றி பெற்றிருக்கும்.

இப்படி தினேஷ் கார்த்திக் செய்த தவறு தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. தினேஷ் கார்த்திக் இப்படி தான் சில முக்கியமான போட்டிகளில் அறிவை பயன்படுத்தாமல் விளையாடுகிறார் என்று விமர்சனமும் வைக்கப்படுகிறது. இப்படி கள சூழலை புரிந்து கொள்ளாமல் தினேஷ் கார்த்திக் நடந்து கொள்வதால் அவரை நம்பி இந்திய அணியில் சேர்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பாக விளையாடும் தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தில் செய்த ஒரே தவறால் அவருடைய வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Story first published: Sunday, April 21, 2024, 23:52 [IST]
Other articles published on Apr 21, 2024
English summary
IPL 2024 - Huge Mistake by dinesh karthik costs his place in indian team for t20 world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+