மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பூஜா சமூக வலைத்தளத்தில் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலானது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
வரும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. அடுத்த பிரதமர் யார் என்று தேர்தல் என்பதால் ஒட்டுமொத்த மக்களின் கவனமும் இங்கு தான் இருக்கிறது.

அண்மையில் கூட சமூக வலைத்தளத்தில் விராட் கோலி ராகுல் காந்தியின் பேட்டியை மொபைலில் அமர்ந்து பார்த்ததாக ஒரு புகைப்படம் வைரலானது. அதன் உண்மை தன்மை தெரியவில்லை என்றாலும் தேர்தல் பிரச்சாரம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் பூஜா வஸ்திராகர். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீராங்கனை ஆவர்.
இந்திய அணிக்காக இவர் 4 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் பூஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாஜக கட்சியை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சித்தரித்து வசூல் டைட்டன்ஸ் என்று புகைப்படத்தை அவர் போட்டு இருந்தார்.
அதில் இம்பேக்ட் வீரராக பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது எப்போதுமே கிரிக்கெட் பிரபலங்கள் அரசியல் குறித்து வெளிப்படையாக விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் 24 வயதான பூஜா பாஜகவின் தேர்தல் பத்திர தொடர்பான விமர்சனத்தை வெளிப்படையாக பதிவிட்டது ஆச்சரியத்தை படுத்தியது.
பூஜாவின் இந்த பதிவை காங்கிரஸ் கட்சியினர் வைரல் ஆக்கினர். எனினும் பிரதமரை எப்படி கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் விமர்சிக்கலாம் என்று பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து தமது மொபைல் நம்மிடம் இல்லை என்றும் யாரோ இவ்வாறு பதிவிட்டதாகவும் பூஜா மன்னிப்பு கேட்டு இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி இதுதான் மரியாதை வைத்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எனினும் பூஜாவுக்கு வந்த மிரட்டலால் தான் அவர் இந்த புகைப்படத்தை எடுத்து விட்டு மன்னிப்பு கேட்டிருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.