For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விவாகரத்துக்கு பின்னரும் அடங்காத டார்ச்சர்.. பெற்ற மகனை பார்க்க முடியவில்லை.. சோகத்தில் இந்திய வீரர்

மொஹாலி: இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை விவாகரத்து செய்த பின்னரும், அவரின் முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஷி டார்ச்சர் செய்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். ஆயிஷா முகர்ஜிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், 2 குழந்தைகள் இருந்தன. அதைப்பற்றி பொருட்படுத்தாமல் ஷிகர் தவான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

IPL 2024 : Indian Cricketer Shikhar Dhawan Ex Wife Ayesha Mukherjee tortures and blocks the communication with his son

அதன்பின் இருவரும் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி தம்பதியினர் விவாகர்த்து செய்தனர். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை அழைத்து கொண்டு ஆயிஷா முகர்ஜி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

இதனால் தனது மகனை பார்க்க முடியாமல் தவித்த ஷிகர் தவான், நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே மகனை சந்தித்தார். இந்த நிலையில் தனது மகன் ஸோராவர் பிறந்தநாளை முன்னிட்டு ஷிகர் தவான் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் ஷிகர் தவான், நாம் நேரில் சந்தித்து கொண்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. அதேபோல் உன்னை வீடியோ மற்றும் புகைப்படங்களில் கூட பார்க்க முடியாமல் 3 மாதங்களுக்கு முன்பே பிளாக் செய்யப்பட்டுள்ளேன். அதனால் மீண்டும் பழைய புகைப்படத்தை கொண்டே வாழ்த்து கூறுகிறேன் என் மகனே.. பிறந்தநாள் வாழ்த்துகள்..

என்னால் உன்னை நேரில் சந்திக்க முடியவில்லை என்றால், டெலிபதி மூலமாக தொடர்பு கொள்ள முடியும். நீ நன்றாக வளர்ந்து வருகிறாய் என்பதை அறிந்து பெருமையாக உள்ளது. எப்போதும் போல் நேர்மறை எண்ணங்களுடன் உதட்டில் சிரிப்புடன் உன்னை சந்திக்க காத்திருக்கிறேன். குறும்புத்தனம் செய்யலாம்.. ஆனால் எப்போதும் யாருக்கும் எந்த பாதிப்பையும் உருவாக்கிட கூடாது. இரக்கம், பணிவு, பொறுமை, வலிமை உள்ளிட்ட பண்புகளுடன் இருக்க வேண்டும்.

உன்னை சந்திக்க முடியவில்லை என்பதால், ஒவ்வொரு நாளும் உனக்காக ஏதாவது மெசேஜ் எழுதி கொண்டே இருக்கிறேன். நீ என்ன செய்கிறார் என்பது பற்றி தினமும் விசாரிக்கிறேன். அதேபோல் என் வாழ்வில் நடக்கும் புதிய விஷயங்களையும் கூறி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஷிகர் தவான் இந்த பதிவின் மூலமாக, விவாகரத்திற்கு பின்னரும் ஆயிஷா முகர்ஜி அவரை டார்ச்சர் செய்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, December 27, 2023, 9:04 [IST]
Other articles published on Dec 27, 2023
English summary
Shikhar Dhawan Ex Wife Ayesha Mukherjee tortures him even after the Divorce and blocks the communication with his son
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+