Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேரல் மிட்செலை அவமானப்படுத்தினாரா தோனி? இந்த தவறை செய்யாதீங்க.. இது டீம் கேம்- இர்பான் பதான் அறிவுரை

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் தோனியும் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்செல்லும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தோனி அடித்த பந்து பவுண்டரி எல்லை அருகே சென்றது. இதனை பயன்படுத்திக்கொண்டு மிட்செல் ரன் ஓடினார். ஆனால் தோனி ரன் ஓடாமல் அங்கே நின்றதால், மிட்செல் மீண்டும் ஸ்ட்ரைக்கர் திசை நோக்கி ஓடினார்.

IPL 2024 - Irfan Pathan advices MS Dhoni not to refuse single while star batsman in opposite

இதனை குறிப்பிட்ட ரசிகர்கள் டேரல் மிட்செல் இரண்டு ரன்களை ஓடி விட்டதாக சிரித்தனர். மேலும் தோனி சிங்கிள்ஸ் எடுக்காமல் தவறு செய்து விட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.எனினும் தோனி அடுத்த பந்தில் சிக்சர் பறக்கவிட்டார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தோனி சிக்ஸர் அடித்ததை தான் ரசிகர்கள் பேசுவார்கள்.

ஏனென்றால் அவருக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மக்கள் அவரை பெரிதும் விரும்புகிறார்கள். இது போல் ஒரு ஆட்டத்தை தான் மக்கள் தோனியிடமிருந்து விரும்புவார்கள். ஆனால் தோனி அந்த தவறை செய்திருக்கவே கூடாது. ஏனென்றால் இது ஒரு பீம் கேம். ஒரு அணியாக இணைந்து விளையாடும்போது இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது.

உங்களுக்கு எதிரே இருக்கும் வீரரும் ஒரு சர்வதேச பிளேயர் தான். அந்த இடத்தில் ஒரு பவுலரோ இல்லை வேறு யாரோ இருந்திருந்தால் நிச்சயமாக தோனி செய்ததை எல்லாரும் புரிந்து கொண்டிருப்பார்கள். தோனி ஏற்கனவே ஜடேஜாவிடம் இதை போல் செய்திருக்கிறார். தற்பொழுது டேரல் மிட்செலிடம் இதே தவறை செய்திருக்கிறார்.தோனி இந்த தவறை தவிர்த்து இருக்க வேண்டும்.
தோனிக்கு எதிராக 19வது ஓவரில் சாம் கரன் சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக கருதுகின்றேன்.

தோனி இருக்கும் பார்மில் அந்த இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் அடித்திருப்பார். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாமல் சாம் கரன் தடுத்து விட்டார். தோனி சிக்ஸர் அடித்தாலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தொடர்ந்து தடுமாறினார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் அடிக்க முடியாத காரணத்தால்தான் தோனி தற்போது எல்லாம் கடைசி நேரத்தில் களம் இறங்குகிறார். அதனை சிறப்பாக எதிர் கொண்டு தோனி சிக்ஸர் அடிக்கின்றார் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 2, 2024, 16:29 [IST]
Other articles published on May 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+