விசாகப்பட்டினம் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் ரன் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கே கே ஆர் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இந்த ஆட்டத்தில் பல பரிட்சை நடத்தினர். விசாகப்பட்டினம் மைதானம் ரன்குவிப்புக்கு சாதகமாகவும் மைதானத்தின் அளவு சிறியதாகவும் இருக்கும் என்பதால் இன்று 200 ரன்கள் தாண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் கே கே ஆர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கே கே ஆர் அணியில் சுனில் நரேன், அபாரமாக விளையாடி 7 பவுண்டரி, 7 சிக்சர் என 39 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார்.

இதேபோன்று ஆங்கிரிஸ் ரகுவான்சி 27 பந்துகளில் 54 ரன்கள் சேர்க்க, அதிரடி வீரர் ரஸில் 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார் .இந்த ஆட்டத்தில் கேகேஆர் அணி 300 ரன்களை குவித்து சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படி இல்லை என்றால் கூட அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக கருதப்பட்ட இந்த ரெக்கார்டை கே கே ஆர் அணி இன்று உடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் டெல்லி அணியில் 35 வயதான இசாந்த் சர்மா ஒரே பந்தின் மூலம் கே கே ஆர் அணியின் சாதனையை தகர்த்தார். ஆட்டத்தில் 19.1 வது ஓவரில் ஆண்டிரூ ரஸில் பாகுபலி போல் களத்தில் நின்று கொண்டு சிக்ஸர்களை விரட்ட காத்திருந்தார்.
கடைசி ஓவர் என்பதால் நிச்சயமாக அவர் ஒரு நான்கு சிக்ஸராவது அடிக்கலாம் என திட்டம் போட்டு இருந்தார். ஏனென்றால் அவர் ஏற்கனவே 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து இந்த நிலையில் கூடுதலாக ஒரு மூன்று சிக்சர் அடித்திருந்தால் கூட கேகேஆர் அணியின் ஸ்கோர் 300 ரன்கள் கிட்ட சென்று இருக்கும். அது மட்டுமல்லாமல் இஷாந்த் சர்மா ஒரே ஓவரில் இந்த ஆட்டத்தில் 26 ரன்கள் கொடுத்திருந்தார்.
இதனால் இஷாந்த் சர்மாவை பொளந்து எடுக்கலாம் என்று ஆன்றூ ரஸில் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் 35 வயதான இஷாந்த் சர்மா ஒரு யாக்கர் பந்தை வீசி ரஸிலை கிளீன் போல்ட் ஆக்கி நிலை குலைய வைத்தார். தாம் ஒரு சிறந்த பந்தில் ஆட்டம் இழந்து இருக்கிறோம் என்பதை உணர்ந்த ரஸில் பேட்டை உயர்த்தி இசாந்த் சர்மாவுக்கு கைத்தட்டியவாறு பெவிலியன் சென்றார்.இஷாந்த் சர்மா கடைசி ஓவரில் எட்டு ரன்களை மட்டுமே கொடுத்தார். ஒருவேளை இஷாந்த் சர்மா அந்த ஓவரில் 20 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தால், நிச்சயம் ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ரெக்கார்டை கே கே ஆர் முறியடித்திருக்கும்.