For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் ஹேசல்வுட் தற்போது மீண்டும் அதே அணிக்காக திரும்பப் போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தற்போது உள்ள சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்குகிறது.

ஜோஸ் ஹேசல்வுட், தன்னுடைய அபாரமான வேகப்பந்து வீச்சால் எதிரணி விக்கெட்டுகளை வேட்டையாடுவதில் இவர் வல்லவர். சிஎஸ்கே அணி 2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல ஜோஸ் ஹேசல்வுட் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது.

IPL 2024- Josh Hazlewood might returns - Fan suggest CSK might bring him

சிஎஸ்கே அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை ஹேசல்வுட் வீழ்த்தி உள்ளார். இந்த நிலையில் ஜோஸ் ஹேசல்வுட் ஆர்சிபி அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். 2022 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் 2023 ஆம் ஆண்டில் காயம் காரணமாக அவர் மூன்று போட்டிகளில் தான் விளையாடினார்.

ஆர்சிபி அணியின் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி ஹேசல்வுட் அணியிலிருந்து விடுவித்தது. ஆர்சிபி அணியின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால் ஹேசல்வுட், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்கிறார் என்ற தகவல் வெளியானதால் இந்த முடிவை எடுத்ததாக ஆர் சி பி அணியும் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் ஹேசல்வுட் பங்கு பெற இருக்கும் ஆஸ்திரேலியா உள்நாட்டு கிரிக்கெட் போட்டி மே இரண்டாம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ஹேசல்வுட், மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் தற்போது மே ஒன்றாம் தேதி முதல் தன்னுடைய சொந்த நாட்டிற்கு செல்கிறார்.

இதனால் அவருக்கு மாற்றாக ஹேசல்வுட் சிஎஸ்கே தேர்வு செய்யும் என்று தகவல் வெளியானது. ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏன் என்றால் ஐபிஎல் விதியின்படி ஒரு வீரர் காயம் அடைந்து வெளியேறினால் மட்டுமே மாற்று வீரர்களை தேர்வு செய்ய முடியும் முஸ்தஃபீசர் ரகுமான் தனது நாட்டுக்காக தான் விளையாட போகிறார் என்பதால் இதை காரணம் காட்டி மாற்று வீரரை சிஎஸ்கே அணியால் தேர்வு செய்ய முடியாது.

இதனால்தான் கான்வே காயம் அடைந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக ரிச்சர்ட் கிலீசன் என்ற வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே வாங்கியுள்ளது. இந்த நிலையில் ஹேசல்வுட் சிஎஸ்கே அணிக்கு வர முடியாது என்றாலும் ஆர்சிபி போன்ற அணிகளுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது .ஏற்கனவே ஆர் சி பி அணி தற்போது பந்துவீச்சில் துவண்டு வரும் நிலையில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி அவர்களுக்கு பதிலாக ஹேசல்வுட், ஆர் சி பி மாற்றகூடும். அப்படி ஆர்சிபி அணிக்கு ஹேசல்வுட் வந்தால் துவண்டு கிடக்கும் ஆர்சிபிக்கு அது ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கலாம்.

Story first published: Friday, April 19, 2024, 6:30 [IST]
Other articles published on Apr 19, 2024
English summary
IPL 2024- Josh Hazlewood might returns - Fan suggest CSK might bring him என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+