For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிங், லெஜண்ட், ஜென்டில்மேன்.. ராஞ்சிக்கு வந்த உமேஷ் யாதவ்.. தோனியை என்ன சொல்லிருக்காரு பாருங்க!

ராஞ்சி: ரஞ்சி டிராபி போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் விதர்பா அணி அபார வெற்றிபெற்ற நிலையில், அனுபவ வீரர் உமேஷ் யாதவ் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார்.

ரஞ்சி டிராபி தொடரில் ஜார்க்கண்ட் அணியை எதிர்த்து விதர்பா அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகிடது. தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் 54 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

IPL 2024 : King, Legend and Gentlemen written by Indian player Umesh Yadav about MS Dhoni after the meeting at Ranchi

2வது இன்னிங்ஸில் துருவ் ஷோரே மற்றும் அதர்வா தய்டே இருவரும் சதம் விளாசியதால், விதர்பா அணி 374 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக 429 ரன்களை ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதில் விதர்பா அணி சார்பாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டிக்கு பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார் உமேஷ் யாதவ். ராஞ்சியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தோனி பயிற்சியில் இருந்த போது இருவரும் சந்தித்துள்ளனர். இதன்பின் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தோனியின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் உமேஷ் யாதவ் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், கம்பேக் கொடுப்பதற்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடி வருகிறார். இவரின் அனுபவத்தின் மூலம் விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் தோனியுடனான சந்திப்புக்கு பின் உமேஷ் யாதவ், அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்துடன் உமேஷ் யாதவ் தோனி பற்றி, "ராஜாவை போல் வந்தார்.. லெஜண்ட் போல் வாழ்ந்தார்.. இப்போது ஜென்டில்மேன் என்று அனைவராலும் நினைவில் வைக்கப்படுகிறார்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், உமேஷ் யாதவ் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ரூ.5.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 29, 2024, 23:10 [IST]
Other articles published on Jan 29, 2024
English summary
IPL 2024 : King, Legend and Gentlemen written by Indian player Umesh Yadav about MS Dhoni after the meeting at Ranchi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+