லக்னோ : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய கே கே ஆர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய கே கே ஆர் அணியில் தொடக்க வீரர் பில் சால்ட், அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

இதேபோன்று மற்ற தொடக்க வீரரான சுனில் நரைன், 39 பந்துகளை எதிர் கொண்டு 81 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டர்களும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இதனை அடுத்து ஆங்கிரீஸ் ரகுவான்ஷி 32 ரன்களும் ஆண்டிரு ரஸில் 12 ரன்களும், ரிங்கு சிங் 16 ரன்களும் எடுக்க இறுதியில் ரமந்திப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் ஒரு பௌண்டரியும் அடங்கும்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 416 என்ற அளவில் இருந்தது. இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இமாலய இலக்கை துரத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 9 ரன்களிலும், கேப்டன் கே எல் ராகுல் 25 ரன்களிலும் ஆட்டமிழக்க, தீபக் ஹூடா ஐந்து ரன்களில் வெளியேறினார்.
ஒரு புறம் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 36 ரன்கள் சேர்க்க மறுபுறம் நிக்கோலஸ் பூரான் 10 ரன்களிலும், ஆயுஸ் பதோனி 15 ரன்களிலும் ஆஸ்டன் டர்னர் 16 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் ஒருவர் கூட இரட்டை இலக்கம் ரன்களை தொடவில்லை.
அனைவரும் வந்த வேகத்தில் திரும்பியதால் லக்னோ அணி 16 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் 137 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. சிஎஸ்கேவுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டிகளை வெற்றி பெற்ற நிலையில் லக்னோ அணி ரசிகர்கள் ஓவராக வாய் பேசினார்கள். தற்போது அவர்களுக்கு கே கே ஆர் அணி தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.