Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பைனலுக்கு சென்ற கொல்கத்தா.. அடுத்த நாளே மருத்துவமனையில் ஷாரூக்கான் அனுமதி..  என்ன நடந்தது?

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் கே கே ஆர் அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர்.

160 ரன்கள் என்று இலக்கை கே கே ஆர் அணி 13.4 ஓவரில் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது. இது கே கே ஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

IPL 2024 - KKR Owner Shahrukh khan admitted in hospital due to heat stroke

ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்று கே கே ஆர் அணி அசத்தியது. இதனால் கே கே ஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கானும் மிகவும் உற்சாகத்தில் இருந்தார். ஷாருக்கான் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்த சூழலில் திடீரென்று கே கே ஆர் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஷாருக்கான் வெற்றி கொண்டாட்டில் இரவு முழுவதும் முழித்திருந்து கொண்டாடியதால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் சந்தேகத்தனர்.

ஆனால் அகமதாபாத்தில் தற்போது வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால், ஷாருக்கானுக்கு ஹிட் ஸ்ட்ரோக் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொல்கத்தா அணிக்கு ஒரு நல்ல விஷயம் நடைபெறும் நிலையில் ஷாருக்கான் மருத்துவமனையில் இருப்பது அந்த அணி வீரர்களின் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேகேஆர் அணி வரும் நாட்களில் சென்னை புறப்பட உள்ளனர்.

Story first published: Wednesday, May 22, 2024, 20:31 [IST]
Other articles published on May 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+