Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs MI: என்ன இது.. பும்ராவை பார்த்து மிரண்டு போன அதிரடி மன்னன்.. சிதறிய ஸ்டம்ப்பு.. டக் அவுட்

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர் சுனில் நரைன் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்தி மிரள வைத்தார் பும்ரா. அவர் வீசிய பந்து ஸ்விங் ஆனதை எதிர்பார்க்காத சுனில் நரைன் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இந்தப் போட்டியில் தீவிரமாக ஆடியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசியது.

IPL 2024 KKR vs MI Jasprit Bumrah took Sunil Narine s wicket in his first ball

மழையின் காரணமாக போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. எனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதல் ஓவரில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் விக்கெட்டை வீழ்த்தினார் நுவான் துஷாரா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இதுவரை நடந்த போட்டிகளில் பும்ராவுக்கு முதல் இரண்டு ஓவர்களின் போது பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த போட்டியில் அவர் இரண்டாவது ஓவரை வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. கொல்கத்தா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சுனில் நரைன் இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். பும்ரா பந்தை யார்க்கராக வீசினார். அதேசமயம் பந்து ஸ்விங் ஆனது. பந்து ஆஃப் சைடு விலகிச் செல்வதாக நினைத்து பந்தை அடிக்காமல் விட்டார் சுனில் நரைன்.

ஆனால் பந்து இன்ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. அதை எதிர்பாராத சுனில் நரைன் தான் சந்தித்த முதல் பந்திலையே ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பும்ரா தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.

இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் சிறப்பான துவக்கத்தை பெற்றது.

Story first published: Saturday, May 11, 2024, 22:23 [IST]
Other articles published on May 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+