Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs MI : "மும்பை இந்தியன்ஸ் தோற்கும் என போட்டிக்கு முன்பே தெரியும்".. ஸ்ரேயாஸ் ஓபன் டாக்

கொல்கத்தா : மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பேசுகையில், "இந்த முடிவு எனக்கு முன்பே தெரியும். இதை நான் முன்பே கணித்திருந்தேன். எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும்" என பேசினார். அவரது பேச்சு மும்பை இந்தியன்ஸ் அணியை சீண்டுவதைப் போல இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2024 KKR vs MI Shreyas Iyer says he manifested the Mumbai Indians defeat


அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களுக்கு 62 ரன்கள் சேர்த்து இருந்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன் பின்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுழற் பந்துவீச்சாளர்களான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை தொடர்ந்து பந்து வீச வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஆண்ட்ரே ரசலும் சிறப்பாக பந்து வீசினார்.

இதை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் அணியாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த வெற்றிக்கு பின் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், "நாங்கள் வெற்றி பெறுவோம் என எனக்கு தெரியும். முன்பே இந்த வெற்றியை நான் கணித்திருந்தேன். போட்டியில் அழுத்தம் ஏற்பட்ட போதும் எங்கள் வீரர்கள் தாங்களாக முன்வந்து சிறப்பாக செயல்பட்டார்கள். பலரும் போட்டியை மாற்றினார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்." என்றார்.

மேலும், "மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் அதிரடியாக ஆடியது. அந்த சூழ்நிலையில் இருந்து முன்னேறி வந்து வென்றது நன்றாக இருந்தது. குறிப்பிட்ட நாளில் எந்த பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படுகிறார் என்பது தான் முக்கியம். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் என இருவருமே சிறப்பாக பந்து வீசினார்கள். நான்காவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச வேண்டும் என நான் நினைத்தேன்" என்றார் ஸ்ரேயாஸ்.

Story first published: Sunday, May 12, 2024, 8:15 [IST]
Other articles published on May 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+