Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024: டி20 வரலாற்றிலேயே படுமோசமான சாதனையை செய்த சுனில் நரைன்.. அவுட் ஆவதில் புதிய ரெக்கார்டு

கொல்கத்தா : டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மோசமான டக் அவுட் சாதனையை செய்து இருக்கிறார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் சுனில் நரைன்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது சுனில் நரைன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பும்ரா வீசிய ஸ்விங் யார்க்கரை கணிக்க முடியாமல் பவுல்டு அவுட் ஆகி இருந்தார்.

IPL 2024 KKR vs MI Sunil Narine registered the worst duck-out record in T20 history

இது ஐபிஎல் தொடரில் அவரது 16 வது டக் அவுட் ஆகும். அதே போல ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இது அவரது 44 வது டக் அவுட். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்து இருக்கிறார் சுனில் நரைன். முன்னதாக இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 43 முறை டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகி இருந்தார். அதுவே அதிகபட்சமாக இருந்தது.

அந்த மோசமான சாதனையை முறியடித்திருக்கும் சுனில் நரைன் தற்போது 44 டக் அவுட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அதேபோல ஐபிஎல் தொடரில் அதிக முறைகள் டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பியூஸ் சாவ்லா உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதே பட்டியலில் தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 17 டக் அவுட்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.
சுனில் நரைன் மற்றும் பியுஷ் சாவ்லா 16 டக் அவுட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் -

44 - சுனில் நரைன்
43 - அலெக்ஸ் ஹேல்ஸ்
42 - ரஷித் கான்
32 - பால் ஸ்டிர்லிங்
31 - கிளென் மேக்ஸ்வெல்
31 - ஜேசன் ராய்

ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் -

17 - தினேஷ் கார்த்திக்
17 - கிளென் மேக்ஸ்வெல்
17 - ரோஹித் சர்மா
16 - பியூஷ் சாவ்லா
16 - சுனில் நரைன்

இந்த போட்டியில் சுனில் நரைன் டக் அவுட் ஆன போதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மழையால் குறைக்கப்பட்ட 16 ஓவர்களில் 157 ரன்கள் குவித்தது. அடுத்த பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Sunday, May 12, 2024, 8:56 [IST]
Other articles published on May 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+