IPL 2024 Final: இந்திய அணியில் கூட இடமில்லை.. ஆனா ஐபிஎல்-இல் பிரம்மாண்ட சாதனை படைத்த ஹர்ஷல் பட்டேல்
சென்னை : 2024ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இவர் இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டிலும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்து சாதித்து இருந்தார். இதன் மூலம் இரண்டு முறை ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் ஹர்ஷல் பட்டேல். முன்னதாக புவனேஸ்வர் குமார் (2016 மற்றும் 2017), டுவைன் பிராவோ (2013 மற்றும் 2015) இந்த சாதனையை செய்து இருந்தனர்.

ஆனால் வேறு எந்த பந்து வீச்சாளரும் செய்யாத ஒரு சாதனையையும் ஹர்ஷல் பட்டேல் செய்துள்ளார். இரண்டு வெவ்வேறு அணிகளுக்காக அவர் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருந்த ஹர்ஷல் பட்டேல், அப்போது 32 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்து இருந்தார்.
தற்போது 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிய ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். .
2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று 25 டி20 போட்டிகளில் ஆடினார். ஆனால், 2023 முதல் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது இந்திய அணியில் இடம் இல்லாத நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மீண்டும் சிறப்பாக பந்து வீசி சாதித்திருக்கிறார். அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படுமா? என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications