For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்மின்ஸ் செய்த மெகா சொதப்பல்.. SRH படுதோல்விக்கு காரணமே இதுதான்.. பொங்கிய ரசிகர்கள்

அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-இடம் படு மோசமாக தோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தவறான டாஸ் முடிவை இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும், இரவு நேரத்தில் பந்து வீசுவது கடினமாக இருக்கும் எனும் நிலையில் ஒவ்வொரு அணியும் முதலில் பந்து வீசவே விரும்பின. ஆனால், அதற்கு நேர்மாறாக பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

IPL 2024 KKR vs SRH Pat Cummins toss deicsion is the reason for the SRH loss

முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். மற்றொரு அதிரடி துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். ராகுல் திருபாதி 55 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் சேர்த்தனர். சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக எளிதாக அதிக பவுண்டரிகளை அடித்தது. அதில் முதல் இரண்டு விக்கெட் பறிபோன நிலையிலும், அடுத்து வெங்கடேஷ் மற்றும் ஸ்ரேயாஸ் கடைசி வரை களத்தில் நின்று தங்கள் அணிக்கு வெற்றி கொடுத்தனர். பின்னிரவில் சரியாக பந்து வீச முடியவில்லை.

அதற்கு காரணம் காற்றில் இருந்த ஈரப்பதம் தான். டாஸ் வென்றபோதே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தால் கொல்கத்தா அணிக்கு இரண்டாவது பாதியில் பந்து வீசுவதில் அதிக சிரமம் ஏற்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், டாஸ் முடிவில் கோட்டை விட்ட ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

Story first published: Tuesday, May 21, 2024, 23:21 [IST]
Other articles published on May 21, 2024
English summary
IPL 2024 KKR vs SRH: Pat Cummins toss deicsion is the reason for the SRH loss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+