சென்னை : 2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்ற அதிரடி வீரர்கள் இருந்ததால் எப்படியும் பெரிய அளவில் ரன் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்த அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது.

அபிஷேக் சர்மா 2 ரன் எடுத்தும், டிராவிஸ் ஹெட் ரன்னே எடுக்காமலும் விக்கெட்களை பறி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 9, மார்கிரம் 20, நிதிஷ் குமார் 13, ஷாபாஸ் அஹ்மத் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். 11.5 ஓவர்களில் 71 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. முதல் ஆறு விக்கெட்கள் விழும் வரை அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இம்பேக்ட் வீரரை பயன்படுத்தாமல் இருந்தார்.
அதற்கு முக்கிய காரணம் இரண்டாவது பாதியில் யாரேனும் ஒரு பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக களம் இறக்கலாம் என அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் 71 ரன்களுக்கு 6 விக்கெட்கள் விழுந்த நிலையில் இனி இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனை இறக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அப்துல் சமத்தை பேட்டிங் செய்ய அனுப்பினார் பாட் கம்மின்ஸ்.
அப்துல் சமத் அதிரடியாக பேட்டிங் ஆடக் கூடியவர். மேலும் களத்தில் கிளாசன் ஆட்டமிழக்காமல் ஆடி வந்ததால் இருவரும் சேர்ந்து அதிரடியாக ரன் குவித்து சன்ரைசர்ஸ் அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்த்தார் பாட் கம்மின்ஸ். ஆனால் அப்துல் சம்பத் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதை எடுத்து இம்பாக்ட் வீரர் வாய்ப்பும் வீணாகிப் போனது.
அதை பார்த்து நொந்து போன பாட் கம்மின்ஸ் அடுத்து தானே பேட்டிங் செய்ய களம் இறங்கினார். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் பாட் கம்மின்ஸ் தான். அவர் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு அடுத்து மார்கிரம் 20 ரன்கள், கிளாசன் 16 ரன்கள் எடுத்திருந்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.