For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

11 வீரர்களுமே பேட்ஸ்மேனாக வையுங்கள்.. பவுலர்கள் தேவையில்ல.. ஆர்சிபிக்கு ஸ்ரீகாந்த் வினோத கோரிக்கை

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணியில் பிளேயிங் லெவனில் உள்ள 11 பேரையும் பேட்ஸ்மேன் ஆகவே தேர்ந்தெடுங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கிண்டல் அடித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 287 ரன்கள் விட்டுக் கொடுத்தது.

ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ள பவுலர்கள் யாருமே சிறப்பாக செயல்படவில்லை. பவுலர்கள் அனைவரும் தங்களுடைய இஷ்டத்திற்கு ரன்களை வாரி வழங்கினர். இந்த நிலையில் ஆர் சி பி அணி குறித்து பேசிய ஸ்ரீகாந்த், ஆர் சி பி அணியில் உள்ள ரீஸ் டோப்ளி, லோகி பெகுர்சன் ஆகியோர் அனைவரும் பேட்ஸ்மேன்களால் நொறுக்கப்படுகிறார்கள்.

IPL 2024 - Kris Srikanth asks RCB to play xi batsman in the team

இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை. லோகி பெகுர்சம் கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு வந்திருக்கிறார். வில் ஜாக்ஸ் மட்டும்தான் ஆர்சிபி அணியின் சிறந்த பவுலராக விளங்கி இருக்கிறார். இதனால் இனி ஆர்சிபி அணி பிளேயிங் லெவனில் 11 பேரையும் பேட்ஸ்மேன்களாக வைத்துக் கொள்ள வேண்டும்.

என்னை கேட்டால் டுபிளசிஸ் ஒரு இரண்டு ஓவர்கள் போட சொல்லுங்கள். கேமரன் கிரீனுக்கு ஒரு நான்கு ஓவர் கொடுங்கள். விராட் கோலிக்கு பந்துவீச்சு கொடுத்திருந்தால் கூட அவர் இத்தனை ரன்களை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். இவர்களையெல்லாம் பார்க்கும் போது விராட் கோலி ஒரு நல்ல பவுலர் ஆக தருகிறார்.

ஒரு கட்டத்தில் விராட் கோலி பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. பந்துகள் ஸ்டேடியத்தை விட்டு வெளியே செல்லும்போது விராட் கோலி ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பேட்டிங் செய்ய வரும் போது விராட் கோலி அத்தனை கோபத்துடன் வந்தார். ஏனென்றால் டிராவிஸ் ஹெட்,கிளாசன் அப்துல் சமத் என அனைவருமே ஆர் சி பி அணியின் வந்து பிச்சை சிதறடித்து விட்டார்கள் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகமது சிராஜ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். அனுபவமே இல்லாத வில் ஜேக்ஸ் மூன்று ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.ஆனால் ரீஸ் டோப்லி, யாஸ் டயல், லோகி பெகுர்ஷன், விஜயகுமார் ஆகியோர் தங்களுக்குள் 10 ஓவர்கள் வீசி 137 ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள்.

Story first published: Wednesday, April 17, 2024, 21:12 [IST]
Other articles published on Apr 17, 2024
English summary
IPL 2024 - Kris Srikanth asks RCB to play xi batsman in the team 11 வீரர்களுமே பேட்ஸ்மேனாக வையுங்கள்.. பவுலர்கள் தேவையில்ல.. ஆர்சிபிக்கு ஸ்ரீகாந்த் வினோத கோரிக்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+