Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. 20 பந்திற்குள் அதிக முறை அரைசதம்.. ஆஸி. வீரர் பிரேசர் அசத்தல்

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்திருந்தாலும் அதிக சதமும், அரை சதமும் அடித்து இருந்தாலும் தற்போது அதனை யாருமே முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பதில்லை. காரணம் தற்போது ஸ்டிரைக் ரேட் தான் அனைத்திற்கும் முக்கியமாக மாறி இருக்கிறது.நீங்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை.

எத்தனை பந்துகளில் அடிக்கிறீர்கள் என்பது தான் தற்போது ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதனால் தான் விராட் கோலி அரைசதம் அரைசதமாக அடித்தால் கூட அவருடைய ஸ்ட்ரைக் ரேட் போதிய அளவில் இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 20 பந்துக்குள் அரைசதம் அடித்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.

IPL 2024 - List of Players with Most half centuries with in 20 balls

இதில் அதிக முறை 20 பந்துக்குள் அரைசதம் அடித்த வீரர்கள் யார் என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம். இதில் தற்போது ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் முதலிடத்தில் இருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாடி வரும் பிரேசர்,மூன்று முறை 20 பந்துக்குள் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த பட்டியலில் பல வீரர்கள் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் இரண்டு முறை 20 பந்துக்குள் அரைசதம் அடித்து அசத்திருக்கிறார். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான், சுனில் நரேன், மற்றும் பொலார்ட் ஆகியோரும் 20 பந்துக்குள் இரண்டுமுறை அரைசதம் அடித்து அசத்தி இருக்கிறார்கள்.

இந்திய வீரர்களில் இஷான் கிசன், கே எல் ராகுல் ஆகியோரும் இரண்டு முறை 20 பந்துக்குள் அரைசதம் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டும் இரண்டு முறை 20 பந்துக்குள் அரைசதம் அடித்து இருக்கிறார். இவ்வளவு இளம் வயதில் பிரசர் அதிரடி காட்டியும், அவர் ஆஸ்திரேலிய டி20 உலககோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 7, 2024, 22:58 [IST]
Other articles published on May 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+