Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புது! புது! பசங்களா வராங்க.. எப்படி விளையாடுறாங்கனு தெரியல.. டெல்லி அணியை பார்த்து புலம்பிய ராகுல்

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதுப்புது இளம் வீரர்கள் பல நாடுகளிலிருந்து வந்து ஸ்டார் அந்தஸ்தை பெறுகிறார்கள். இளம் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை தெரியாமல் பல முன்னணி கேப்டன்கள் தடுமாறுகிறார்கள்.

இன்றைய லக்னோ டெல்லி அணி ஆட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. டெல்லி அணியில் களமிறங்கிய ஜேக் பிரேசர் என்ற வீரர் அபாரமாக விளையாடி டெல்லியனின் வெற்றிக்கு வித்திட்டார். 5 சிக்சர், இரண்டு பவுண்டரி என 35 பந்தில் அவர் 55 ரன்கள் விளாசினார்.

IPL 2024 - LSG Captain KL Rahul lauds Jake frasser as unknown player played brilliantly

இதன் மூலம் டெல்லி அணி 18 புள்ளி ஒரு ஓவரிலெல்லாம் வெற்றி பெற்றது. 22 வயதான ஜேக் பிரேசர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் தாங்கள் 15,20 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என்று தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் பேட்டிங் செய்யும்போது குறைந்தபட்சம் 180 ரன்கள் அடித்திருக்க வேண்டும்.

முதலில் வேக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. பின்னர் சில பந்து பவுன்சே ஆகவில்லை. இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு குல்திப் யாதவ் சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு ரன் சேர்க்கும் வாய்ப்பை அவர் தரவில்லை. இருப்பினும் கடைசிவரை நாங்கள் போராடினோம். இதேபோன்று ஜேக் பிரேஸர் இன்றைய ஆட்டத்தில் பிரமாதமாக விளையாடிவிட்டார்.

அவரைப் பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. புது வீரர் எப்படி விளையாட போகிறார் என்று தெரியாததால் கொஞ்சம் தடுமாறினோம். இருப்பினும் அவருடைய பேட்டிங் குறித்து நாங்கள் பல வீடியோக்களையும் பார்த்தோம். எனினும் ஜேக் பிரேஸருக்கு எங்களுடைய பாராட்டுக்கள். நாங்கள் ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்தோம்.

முதலில் வார்னர் விக்கெட்டை நாங்கள் வீழ்த்தினோம். பத்தாவது ஒவ்வொரு வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். அதன் பிறகு ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டோம். பிறகு பிஷப் பண்ட், அபாரமாக விளையாடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து கவர்ந்து விட்டு சென்றார்கள். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் என்ன புதுமையாக செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று யோசிப்பதே சிரமம் தான்.

அக்சர் பட்டேலுக்கும் பெரிய அளவில் பந்து எடுபடவில்லை. எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மாயங் யாதவ் தற்போது உடல் தகுதி முன்னேறி இருக்கிறார். எனினும் அவர் இளம்ப வீரர் என்பதால் நாங்கள் அவரை தொடர்ந்து விளையாட வைக்க விரும்பவில்லை. அவருடைய உடல் தகுதியை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். எனவே அவருக்கு கொஞ்சம் ஓய்வு வழங்கி இருக்கிறோம். இன்னும் சில ஆட்டங்களுக்கு பிறகு அவர் களத்திற்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்று கே எல் ராகுல் கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 13, 2024, 7:00 [IST]
Other articles published on Apr 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+