94 ரன்களுக்கு 7 விக்கெட்டு இழந்த லக்னோ.. இறுதியில் சாதனை படைத்த பதோனி, அர்சத்.. டெல்லிக்கு சவால்
பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி அபாரமாக பேட்டிங் செய்து கௌரவமான இலக்கை எட்டியது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய குயிண்டன் டிகாக் அபாரமான நான்கு பவுண்டரிகளை எடுத்து 13 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து கே எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல கம்பெனி கொடுத்தார்.

ஆனால் மறுபுறத்தில் இருந்த தேவுதட் படிக்கால் மூன்று ரன்களிலும், மார்க்கஸ் ஸ்டோனிழ்ச் 8 ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் கோல்டன் டக் ஆகியும் அடுத்தடுத்து வெளியேற, கேப்டன் கே எல் ராகுல் 22 பந்துகளுக்கு எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்தார். பெரிய ரன் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முக்கிய கட்டத்தில் வெளியேறினார்.
நடப்பு தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்த தீபக் ஹூடா,13 பந்துகளின் 10 ரன்கள் தான் சேர்த்தார். அதனால் லக்னோ அணி 94 ரன்கள் சேர்ப்பதற்கு ஏழு விக்கெட் இழந்து தருமாறுகிறது.எட்டாவது விக்கெட்டுக்கு அர்ஷத் கான் உடன் ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி அபாரமாக விளையாடி லக்னோ அணியை சரிவிலிருந்து மீட்டது.
35 பந்துகள் எதிர்கொண்ட ஆயுஸ் பதோனி 55 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். அர்ஷத் கான் 16 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து எட்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் எட்டாம் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை ஆயுஷ் பதோனி சேர்த்து இருக்கிறது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதப் அவாரமாக பந்துவீசி நான்கு ஓவர்களின் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இசாந்த் சர்மா, முகேஷ் குமார் ஒருவிக்கட்டும், கலில் அகமது இரண்டு விக்கெட்டும் வீழித்தனர்.
Story first published: Friday, April 12, 2024, 21:56 [IST]
Other articles published on Apr 12, 2024


Click it and Unblock the Notifications