Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட் நியூஸ்.. சிஎஸ்கே அணியை விட்டு விலகிய முக்கிய வீரர்.. அழுத்தம் கொடுத்த கிரிக்கெட் போர்டு

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு ஒரு மோசமான செய்தியை அளித்துள்ளது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மதிஷா பதிரானா முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் அவர் அதில் 13 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதன் மூலம் மிகக் குறைந்த போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார்.

IPL 2024 Matheesha Pathirana might not play anymore for CSK in IPL 2024


அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் விளையாடவில்லை. அப்போது அவர் இலங்கை சென்றதாக கூறப்பட்டது. இலங்கையில் விசா வாங்குவதற்காக சென்றவர் மீண்டும் இந்தியா வந்தார். அடுத்து தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால், அவர் அந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

பதிரானாவுக்கு காலில் தசைப் பிடிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அமைப்பு அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் 2024 டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது. அந்த தொடரில் பதிரானா இலங்கையின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக செயல்பட இருக்கிறார்.

எனவே அவரது காயத்தை விரைவில் சரி செய்ய வேண்டும் என்பதால் இலங்கை கிரிக்கெட் அமைப்பு அவரை அழைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். சிஎஸ்கே அணிக்கு இன்னும் லீக் சுற்றில் மூன்று போட்டிகள் மீதம் உள்ளன. அடுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் சிஎஸ்கே அணிக்கு பதிரானா முக்கியமான பந்துவீச்சாளராக இருந்திருப்பார். தற்போது இலங்கை சென்றுள்ள அவர் இனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

முன்னதாக சிஎஸ்கே அணியில இடம் பெற்று இருந்த வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை அந்த நாட்டின் கிரிக்கெட் அமைப்பு அழைத்துக் கொண்டது. அடுத்து வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் சிக்கி தொடரிலிருந்து விலகும் நிலையில் இருக்கிறார். தற்போது பதிரானாவும் பாதியில் விலக இருக்கிறார். இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
Story first published: Monday, May 6, 2024, 7:45 [IST]
Other articles published on May 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+