Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs DC - போராடி தோற்ற மும்பை.. ஹர்திக் பாண்டியாவுக்கு 6வது தோல்வி.. கடுப்பில் அம்பானி குடும்பம்

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் சனியும் பல பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஒரு கட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் 240 ரன்கள் எடுத்தால் அதிசயமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சர்வ சாதாரணமாக ஒவ்வொரு அணியும் 250 ரன்கள் அடிக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் பேய் பிடித்தது போல் அதிரடியாக விளையாடினார்.

IPL 2024 MI vs DC - Hardik Pandya Faces 6th loss as Delhi capitals won by 10 runs

27 பந்துகளை எதிர் கொண்டு 84 ரன்கள் இமாலய சிக்சர்களும் அடங்கும். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் போரெல் 27 பந்துகளில் 36 ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஐந்து இமாலய சிக்சர்களை அடித்து 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட் தன் பங்குக்கு இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரி என 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன்ஸ் ஸ்டெப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் குவிக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் வெளியேறினார்.

அதிரடியாக ஆட முற்பட்டு இசான் கிஷன்14 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சூரிய குமார் யாதவ் 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் கலில் அகமத் பந்துவீச்சில் ஃபெவிலியன் திரும்பினார். நேஹல் வத்தேரா நான்கு ரன்களில் வெளியேற கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் திலக் வர்மாவும் ஜோடி சென்று மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டிங்கில் ஜொலித்தார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும். ஹர்திக் பாண்டியா பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கட்டத்தில் வெளியேறினார். இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டீம் டேவிட் அதிரடி காட்டினாலும் அவராலும் கடைசிவரை நிற்க முடியவில்லை.

17 பந்தில் 37 ரன்களில் டிம் டேவிட் ஆட்டம் இழக்க, திலக் வர்மா 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் தோல்வி உறுதியானது. கடைசி ஓவரில் 25 ரன்கள் அடிக்க வேண்டும் என நிலை இருந்தபோது கூட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அதில் சிக்ஸ் பவுண்டரி என அடித்தாலும் டெல்லியின் இலக்கை தொட முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Story first published: Saturday, April 27, 2024, 19:59 [IST]
Other articles published on Apr 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+