Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs KKR: ஆட்டத்தை திருப்பிய வருண் சக்கரவர்த்தி.. வாயடைத்துப் போன மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அவரது பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பின் நிதான ஆட்டத்துக்கு மாறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

IPL 2024 MI vs KKR Varun Chakravarthy changed the course of Mumbai Indians chasing


முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பேட்டிங்கில் தட்டுத் தடுமாறி 19.5 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் என்ற இலக்குடன் சேஸிங் செய்யத் தொடங்கியது.

ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்தாவது ஓவரிலேயே சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை பந்து வீச அழைத்தது.
அந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் நமன் திர் பவுல்ட் அவுட் ஆனார். முன்னதாக மிட்செல் ஸ்டார்க் துவக்க வீரர் இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்தி இருந்த நிலையில், அடுத்து நமன் திர் விக்கெட்டும் பறிபோனதால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மயான அமைதியுடன் இருந்தனர்.

அப்போதே இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது கடினம் என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது. மும்பை இந்தியன்ஸ் அப்போதே நிதான ஆட்டத்துக்கு மாறியது. ஆனாலும், அடுத்து சுனில் நரைன் ஓவரில் ரோஹித் சர்மா விக்கெட்டை பறி கொடுத்தார். மீண்டும் ஒன்பதாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி திலக் வர்மா விக்கெட்டை வீழ்த்தினார். மூன்று ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி இருந்தார் வருண் சக்கரவர்த்தி. இவர் பந்து வீசத் துவங்கியவுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் சரிவை சந்தித்தது. 11.2 அவர்களின் 71 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்தது. சுனில் நரைனும் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

Story first published: Friday, May 3, 2024, 23:03 [IST]
Other articles published on May 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+