ஐபிஎல் 2024 - அதிக பந்துகளை வீணடித்த வீரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் இவரா? இந்தியா கதி அவ்வளவு தான்
மும்பை : ஐபிஎல் தொடரின் 2024 ஆம் ஆண்டு சீசனில் பலவீரர்கள் அபாரமாக விளையாடி வந்தாலும், ஸ்ட்ரைக் ரேட் மிகவும் முக்கியம் என்ற கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எவ்வளவு தான் சதம் அடித்தாலும், அரை சதம் அடித்தாலும் ரங்களை விரைவாக அடிக்கவில்லை என்றால் அந்த இன்னிங்ஸை தற்போது ரசிகர்கள் குறை கூறுகின்றனர்.
ஏனென்றால் தற்போது 250 ரன்கள் அடித்தால் கூட அதனை சேசிங் செய்யும் விஷயம் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பந்துகளை வீணடிக்காமல் பேட்ஸ்மேன்கள் விளையாடினால் மட்டுமே அந்த அணிக்கு வெற்றி கிடைக்கும் என்ற நிலை வந்துள்ளது.

இதனால் பந்துகளை வேஸ்ட் செய்யாமல் அதனை ரன்னாக ஓட வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக பந்துகளை வீணடித்த வீரர்கள் யார் என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம். டி 20 உலக கோப்பையில் விராட் கோலி சேர்க்க வேண்டாம் என்று ரசிகர்களின் சில தரப்பினர் குறிப்பிட்டிருந்தனர்.
காரணம் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஐபிஎல் சீசனில் அதிக பந்துகளை வீணடித்த வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 114 பந்துகளை வீணடித்திருக்கிறார். அதே சமயம் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் விராட் கோலி தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று இரண்டாவது இடத்தில் ருதுராஜ் இருக்கிறார். ருதுராஜ் 110 பந்துகளை வீணடித்திருக்கிறார். அதேசமயம் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் அவர்தான் இருக்கிறார். அதிக பந்துகளை வீணடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கே.எல் ராகுல் இருக்கிறார்.

ராகுல் இதுவரை 109 பந்துகளை வீணடித்திருக்கிறார். ஆனால் ராகுல் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். நான்காம் இடத்தில் சுனில் நரைன் இருக்கின்றார். சுனில் நரைன் இதுவரை 99 பந்துகளை வீணடித்திருக்கிறார். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இதேபோன்று தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 பந்துகளை வீணடித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா 91 பந்துகளை வீணடித்து இருக்கிறார். அதாவது 42 சதவீதம் பந்துகளை அவர் சாப்பிட்டு இருக்கிறார். இதில் ரோகித் சர்மா அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 15 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications