For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024 - லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்?

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனின் லீக் சுற்று தற்போது முடிவடைந்து இருக்கிறது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்று மே 19ஆம் தேதி ஆன ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

மொத்தம் 70 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. மே 21ஆம் தேதி முதல் குவாலிஃபயர் போட்டியில் கேகேஆர்-சன்ரைசர்ஸ் அணியும்,மே 22 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது.

IPL 2024 - Most runs and wickets by a players after League stage

இதனை அடுத்து மே 24ஆம் தேதி குவாலிபயர் 2 போட்டியும் மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம். இதில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 708 ரன்களை அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.இதில் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடங்கும்.

இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் இருக்கிறார். இவர் 14 போட்டியில் விளையாடி 583 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், நான்கு அரை சதமும் அடங்கும். மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் வீரர் ட்ராவிஸ் ஹெட் 533 ரன்களுடன் இருக்கின்றார். நான்காவது இடத்தில் ரியான் பராக் 14 போட்டிகளில் விளையாடி 531 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

ஐந்தாவது இடத்தில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களும்,லக்னோ அணியின் கே எல் ராகுல் 14 போட்டிகளில் விளையாடி 520 ரன்களும் எடுத்திருக்கிறார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 போட்டியில் விளையாடிய 504 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளருக்கான பட்டியலில் பஞ்சாப் அணியின் ஹர்சல் பட்டேல் 14 போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் மும்பை அணியின் பும்ரா 13 போட்டிகள் விளையாடி 20 விக்கெட்டுகளையும், மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணியின் ஆர்ஸ்தீப் சிங் 14 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட் எடுத்திருக்கிறார்கள். நான்காவது இடத்தில் கே கே ஆர் அணியின் வருண் சக்கரவர்த்தி 13 போட்டியில் விளையாடி 18 விக்கெட்டுகளும், ஐந்தாவது இடத்தில் டெல்லி அணியின் முகேஷ் குமார் 10 போட்டியில் விளையாடி 17 விக்கெட்டுகளையும், ஆறாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் நடராஜன் 11 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும், ஏழாவது இடத்தில் சிஎஸ்கே வீரர் தேஷ் பாண்டே 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார்கள்.

Story first published: Monday, May 20, 2024, 7:02 [IST]
Other articles published on May 20, 2024
English summary
IPL 2024 - Most runs and wickets by a players after League stage IPL 2024 - லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+