Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் தான் தோனியின் மூத்த கிரிக்கெட் ரசிகர்.. 103 வயது சிஎஸ்கே ரசிகருக்கு தோனி தந்த பரிசு

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய கடைசி சீசனில் விளையாடி வருகிறார். தோனிக்கு ஆறிலிருந்து அறுபது வயது வரை ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்று தெரியும்.

ஆனால் தோனிக்கு 103 வயதில் ஒரு ரசிகர் இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 103 வயது என்றால் அவர் கிட்டத்தட்ட எத்தனை கிரிக்கெட் வீரர்களை பார்த்திருப்பார். டான் பிராட்மேன் தொடங்கி சச்சின் டெண்டுல்கர் வரை பல கிரிக்கெட் வீரர்களை பார்த்த ஒருவர் தற்போது தோனியின் ரசிகராக இருக்கிறார்.

IPL 2024 - MS Dhoni Gifted CSK Jersey for 103 Year old Fan

சென்னையை சேர்ந்த இந்த 103 வயது ரசிகரின் பெயர் ராமதாஸ். இவருக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். தன்னுடைய இந்த வயதிலும் கூட சிஎஸ்கே வின் தீவிர ரசிகராக இருக்கிறார். மணி ஏழு முப்பது ஆனால் சிஎஸ்கே விளையாடுகிறது என்று தெரிந்தால் டிவி முன் தன்னுடைய கண்ணாடியை போட்டுக்கொண்டு அமர்ந்து தோனி வருகைக்காக காத்துக் கொண்டு இருப்பாராம்.

60 ,70 வயதை தாண்டினாலே நடக்கவும் பார்க்கவும் கஷ்டப்பட்டு வரும் இந்த காலத்தில் 103 வயதில் தோனிக்கு ராமதாஸ் சப்போர்ட் செய்து வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், தமக்கு 103 வயது ஆகிறது. நான் வயதானவர் கிடையாது. நான் ஒரு சீனியர் யூத் என்று காமெடியாக பதில் அளித்து இருக்கிறார். மேலும் கிரிக்கெட் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று கிரிக்கெட் பார்ப்பது மட்டும்தான் தன்னுடைய பொழுதுபோக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ராமதாஸ் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் மக்களுடன் பழகி கிரிக்கெட்டையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.மேலும் திருச்சியில் வசித்து வந்த போது உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் ராமதாஸ் ஆடி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய ரசிகர் பற்றி தெரிந்து கொண்ட தோனி ஆச்சரியமடைந்து அவருக்கு ஒரு கிப்ட் அளித்திருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் ஜெர்சியில் உங்களுடைய ஆதரவுக்கு மிகவும் நன்றி தாத்தா என்று தோனி குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறார். தோனிக்கு 103 வயதில் ஒரு ரசிகர் இருக்கிறார் என தெரிந்தவுடன் அதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Friday, May 3, 2024, 14:26 [IST]
Other articles published on May 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+