IPL 2024: 42 வயதில் தோனி மாஸ் ரெக்கார்டு.. ஐபிஎல் பேட்டிங் வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்
சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் தனது 42 வயதில் விளையாடும் தோனி இந்த ஆண்டு பேட்டிங் சராசரியில் முதல் இடத்தை பிடித்து அதிர விட்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை ஆடிய 10 போட்டிகளின் முடிவில் தோனி 110 ரன்கள் பேட்டிங் சராசரியுடன் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகிய தோனி அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்கில் ஃபினிஷராக மட்டுமே செயல்பட்டு வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் பேட்டிங் செய்த அவர் ஒவ்வொரு முறையும் கடைசி ஓவரிலோ அல்லது இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதோ தான் களத்துக்கு வந்தார்.
முதல் ஏழு போட்டிகளிலும் தோனி அவுட் ஆகாமல் இருந்தார். அந்த வகையில் 2024 ஐபிஎல் தொடரின் நாட் அவுட் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்று இருந்த நிலையில், எட்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயன்று ரன் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இருந்தார். இதை அடுத்து இதுவரை 8 போட்டிகளில் எடுத்த 110 ரன்கள் அவரது பேட்டிங் சராசரியாக மாறியது. ஏழு போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்ததால் அவர் அவுட் ஆன ஒரு போட்டியை மட்டுமே பேட்டிங் சராசரியை கணக்கிட எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தோனி 110 ரன்கள் பேட்டிங் சராசரியுடன் 2024 ஐபிஎல் தொடரில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 229 ஆக உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் 100 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் துவக்க வீரர் ஜேக் பிரேசர்-க்கு (ஸ்ட்ரைக் ரேட் 233) அடுத்த இடத்தில் இருக்கிறார் தோனி.


Click it and Unblock the Notifications