Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : ஹுக்கா அடிக்கும் தோனி.. இதெல்லாம் தேவையா தல.. சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஹுக்கா அடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் முகமாகவே இருக்கிறார். ஐபிஎல் கோப்பைகள், விளம்பர ஒப்பந்தங்கள், தொழில்கள், கார்ஸ், பைக்ஸ், முன்னாள் வீரர்களுடனான சந்திப்பு என்று தோனியின் சொந்த வாழ்க்கையை நடப்பவை ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2024 : MS Dhoni is smoking Hookah in a function and the video is out social media and trending

கடந்த ஐபிஎல் தொடரில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பின், நீண்ட நாட்களாக தோனி ஓய்வில் இருந்தார். அதன்பின் சிறுசிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்ட தோனி, முழுமையாக நடக்க தொடங்கிய பின் விடுமுறைக்காக வெளிநாடு சென்று திரும்பினார். அப்போது முதல் தோனி இந்தியா முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதனிடையே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தோனி தனது குடும்பத்தினருடன் துபாய்-க்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி புதிய கதைகளுக்கு, குழப்பதற்கும் வித்திட்டுள்ளது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்எஸ் தோனி, புகைப்பழத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ஹுக்கா எனப்படும் போதை பழக்கத்தில் ஈடுபட்டு வரும் தோனியின் நடவடிக்கை ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ள தோனி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகையில் இளைஞர்கள் மத்தியில் வெகு விரைவாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வீடியோ உண்மையா அல்லது பொய்யா என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. இருப்பினும் தோனி தனது புதிய ஹேர்ஸ்டைலில் கோட்-சூட் அணிந்து ஹுக்கா அடிப்பது போல் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஹுக்கா போன்ற போதைப் பழக்கத்தால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் என்பதோடு, கிரிக்கெட் வீரரே இப்படி செயல்படலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Sunday, January 7, 2024, 7:51 [IST]
Other articles published on Jan 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+