Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - பேட்டிங்கிலிருந்து ஓய்வு? இனி வெறும் விக்கெட் கீப்பிங் தான்.. தோனி எடுத்த புதிய முடிவு

மும்பை : ஐபிஎல் கிரிக்க தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசன் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை செய்திருப்பது இந்த தொடர் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இந்த நிலையில் மும்பைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் அது சிஎஸ்கே அணியால் மட்டுமே முடியும். இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டில் சி எஸ் கே கேப்டன் தோனி ஒரு புதிய முடிவை எடுக்க இருப்பதாக தெரிகிறது.

IPL 2024 - MS Dhoni might Play as Impact player to avoid batting


அதன்படி கேப்டன் பதவியில் இருந்து விலகி ஜடேஜா அல்லது ருதுராஜை கேப்டனாக தோனி நியமிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் ஐபிஎல் இம்பேக்ட் விதியை பயன்படுத்தி தோனி இனி பேட்டிங் செய்ய போவதில்லை என்ற முடிவையும் எடுத்திருக்கிறார். கேப்டனாக தோனி செயல்படவில்லை என்றால் ருதுராஜ் அல்லது ஜடேஜா தான் களத்தில் கேப்டனாக இருப்பார்கள்.

அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக தோனி விக்கெட் கீப்பிங் மட்டும் செய்வார் என தெரிகிறது. இதன் மூலம் இம்பாக்ட் வீரராக பந்து வீசும் போது விக்கெட் கீப்பராக களத்துக்கு திரும்பும் தோனி பேட்டிங் செய்யும்போது தமக்கு பதில் வேற ஒரு இளம் வீரரை களத்திற்கு அனுப்புவார் என தெரிகிறது.

தோனிக்கு ஏற்கனவே காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்த புதிய முடிவை தோனி எடுத்திருக்கலாம் என தெரிகிறது. ஒருவேளை தனது உடல் தகுதி 100 சதவீதம் இருந்து பேட்டிங் பார்ம் சிறப்பாக இருப்பதை தோனி உணர்ந்தால் அவர் இந்த முடிவை எடுக்க மாட்டார். தற்சமயம் வரை இதனை பிளான் பி ஆகத்தான் தோனி வைத்திருப்பார் என தெரிகிறது .

அறுவை சிகிச்சைக்கு பிறகு 100% உடல் தகுதியை எட்டும் முயற்சியில் தோனி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். வரும் மார்ச் மாதம் தான் தோனி தம்மால் பேட்டிங் செய்ய முடியுமா என்பதை பயிற்சி முகாமில் சுயபரிசோதனை செய்து கொண்டு அதன் பிறகு இம்பேக்ட் வீரர் விதியை பயன்படுத்தி பேட்டிங்கில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளும் முடிவை எடுப்பார் என கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
Story first published: Sunday, December 31, 2023, 23:06 [IST]
Other articles published on Dec 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+