ஒரு ஷாட்டால் வந்த தலைவலி.. ஐபிஎல் தொடரில் இருந்தே தோனி விலக வாய்ப்பு? SRH ஆட்டத்தில் ஓய்வு
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் நட்சத்திர வீரருமான தோனி காயம் காரணமாக விலகக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 42 வயதான தோனி, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளை எதிர் கொண்டு 37 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 231 என்ற அளவில் அதி பயங்கரமாக இருந்தது. இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தோனியின் ஆட்டம் இருந்தது. இந்த நிலையில் தோனி அபாரமாக விளையாடி வருகிறார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அவருக்கு வயதாகிவிட்டது என்பதும் உண்மை.

எவ்வளவுதான் மாவீரனாக இருந்தாலும் வயதானால் அவர்களுடைய உடல் தங்களுடைய மூளையின் பேச்சுக்கு ஒத்துழைக்காது. அவ்வளவு என் 19, 20 வயதில் நாமே வேகமாக ஓடி பேருந்துகள் எல்லாம் ஏறி இருப்போம். ஆனால் இன்று 30 வயதை தாண்டியவுடன் வேகமாக நடக்கவே யோசிப்போம். அப்படி இருக்கும் போது விளையாட்டு வீரர் இளம் வயதில் எப்படி சிறப்பாக செயல்பட்டாரோ அதேபோல் வயதாகியும் செயல்பட முடியும் என்பது நினைப்பது தவறு.
அதையும் மீறி அவர் செயல்பட்டால் நிச்சயமாக உடலளவில் பல காயங்கள் ஏற்படும். தோனி கடந்த சீசனில் காயத்தோடு தான் விளையாடினார் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே தன்னுடைய காலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவருடைய உடல் தகுதி நல்ல முறையில் இருப்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது 19 புள்ளி 2 பந்தில் தோனி அடுத்த ஒரு ஷாட் தான் தற்போது அவருக்கு சிக்கல் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே கையால் தோனி சிக்ஸர் அடித்த போது தன்னுடைய முழு பலம் மற்றும் உடல் எடையும் அவருக்கு பிரச்சனையை கொடுத்த கால்தான் தாங்கியது. இதன் காரணமாக தான் தோனி கடைசி ஓவரில் ரன்களே ஓடாமல் நின்றார். போட்டி முடிந்த பிறகு கூட தோனி காலை ஒரு மாதிரி தாங்கி தான் நடந்து வந்தார்.
இதன் காரணமாக தோனி வரும் வெள்ளிக்கிழமை சிஎஸ்கே விளையாடும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வலியுடன் விளையாடி காயத்தை பெரிதாக்கி கொள்வது அவருடைய வாழ்க்கை முறைக்கும் நல்லதல்ல. ரசிகர்களாகிய நமக்கு தோனியை மிகவும் பிடிக்கும் தான்.
ஆனால் அதற்காக அவர் தன்னுடைய உடல் தகுதியை தியாகம் செய்து கொண்டு விளையாடுகிறார். தோனி உடல் தகுதி எப்படி போனாலும், பரவாயில்லை அவர் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நினைப்பது நிச்சயம் நமது சுயநலம் தான். உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் நீங்கள் நல்லா இருந்தால் போதும் என்று மனது நினைக்க வேண்டும். ஒருவேளை டோனி ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் ஓய்வு பெற்றால், அதை வரவேற்கும் மனப்பக்குவத்தை ரசிகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications