Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஓய்வு பெற்றால் தான் ரோஹித்தால் இந்த சாதனையை முறியடிக்க முடியும்.. தோனியின் மாஸ் ரெக்கார்டு

சென்னை : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி பெற்ற வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் தோனி தற்போது அதிலும் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இது தோனியின் 150வது ஐபிஎல் வெற்றி ஆகும். ஐபிஎல் தொடரில் 150 வெற்றிகள் என்ற மைல்கல்லை தொட்ட ஒரே வீரர் தோனி மட்டுமே. இந்த 150 வெற்றிகளில் 135 வெற்றிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், 15 வெற்றிகள் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் கிடைத்தன.

IPL 2024 MS Dhoni registers 150 wins in the IPL followed by Rohit Sharma

தோனி மொத்தமாக 259 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதில் கேப்டனாக பெற்ற வெற்றிகள் பட்டியலிலும் தோனியே முதல் இடத்தில் இருக்கிறார். கேப்டனாக 226 போட்டிகளில் 133 வெற்றிகளை பெற்று இருக்கிறார் தோனி. ஐபிஎல் தொடரில் வேறு எந்த வீரரும் இன்னும் கேப்டனாக 100 வெற்றிகளைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா உள்ளனர். இவர்கள் இருவரும் 133 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் தோனியின் 150 வெற்றிகள் என்ற மைல்கல் சாதனையை சமன் செய்ய முடியும் என்றாலும், தோனி பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கையை முந்த வேண்டும் என்றால் அவர் ஓய்வு பெறும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒருவேளை தோனி 2024 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றால், அடுத்த இரண்டு ஆண்டு ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றால் மட்டுமே ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜாவால் தோனியின் சாதனையை முறியடிக்க முடியும்.

அதிக ஐபிஎல் வெற்றிகள் பெற்ற வீரர்கள் பட்டியல் -

தோனி - 150
ரவீந்திர ஜடேஜா - 133
ரோஹித் சர்மா - 133
தினேஷ் கார்த்திக் - 125
சுரேஷ் ரெய்னா - 125

Story first published: Monday, April 29, 2024, 10:33 [IST]
Other articles published on Apr 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+