Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்சல் படேலை வாங்கியது ஏன் தெரியுமா? மைதானத்தை மாற்றும் பஞ்சாப் அணி.. இது பிரீத்தி ஜிந்தா ட்விஸ்ட்!

மொஹாலி: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் சொந்த மைதானமாக மொஹாலி மைதானம் இருந்து வந்த சூழலில், இனி முல்லன்பூர் மைதானமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வெல்லாத அணிகளில் முதன்மையான அணி பஞ்சாப் அணி தான். இதற்கு காரணம் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தான். ஏனென்றால் சீசனுக்கு ஒரு கேப்டன், சீசனுக்கு ஒரு பயிற்சியாளர் என்று இதுவரை பஞ்சாப் அணிக்கு 10க்கும் மேற்பட்ட கேப்டன்கள் மற்றும் 10க்கும் அதிகமான பயிற்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர்.

IPL 2024 : Mullanpur Stadium likely to be the home ground for Preity Zinta owned Punjab Kings during the IPL 2024


அந்த வகையில் கடந்த சீசனில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார். அதேபோல் கடந்த சீசனுக்கு பின் பஞ்சாப் அணியில் சில மாற்றங்கள் நடந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடும் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா ஆகியோரை பஞ்சாப் அணி நிர்வாகம் தக்க வைத்து கொண்டுள்ளது. அதேபோல் ரபாடா, ராகுல் சஹர், சாம் கரண், ஜானி பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இதன் மூலமாக பஞ்சாப் அணி சார்பாக வலிமையான பிளேயிங் லெவனை களமிறக்க முடியும். ஆனாலும் மொஹாலி மைதானத்தில் 200 ரன்களை விளாசினாலும், எளிதாக டிஃபெண்ட் செய்ய முடியாது. தார் ரோடை போல் பிட்சில் எந்த உதவியும் பவுலர்களுக்கு கிடைக்காது. இதனால் டாஸ் வென்று சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றி நிச்சயம் என்ற சூழல் இருந்து வந்தது.

இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி நிர்வாகம் சொந்த மைதானமாக மொஹாலி மைதானம் இல்லாமல் புதிதாக கட்டப்பட்டுள்ள முல்லன்பூர் மைதானத்தை தேர்வு செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லன்பூர் மைதானம் 42 ஏக்கரில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. பயிற்சிக்காக மட்டும் 12 பிட்ச்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் 30 ஆயிரத்திற்கும் அதிகளவிலான ரசிகர்கள் மற்றும் 1800 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சரிசமமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கு மைதானம் தயாராக இருக்கும் என்று தெரிய வந்துள்ளதால், பஞ்சாப் அணி இம்முறை முல்லன்பூர் மைதானத்தில் தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஹர்சல் படேலை ரூ.11.75 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Monday, January 1, 2024, 17:03 [IST]
Other articles published on Jan 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+