Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது முறையாக சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற மும்பை.. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சம்பவம்!

பெங்களூர்: சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 2022-23 சீசனில் சையத் முஷ்டாக் அலி தொடரை மும்பை அனி வென்றிருந்த நிலையில், தற்போது 2வது முறையாக சென்று புதிய சாதனை படைத்துள்ளது.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான இறுதிப்போட்டியில் மும்பை அணியை மத்திய பிரதேசம் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மத்திய பிரதேச அணி தரப்பில் அர்பித் - ஹர்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரிலேயே அர்பித் 3 ரன்களிலும், ஹர்ஷ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ipl 2025 mumbai smat 2024 2025


இதன்பின் சுப்ரன்ஷு சேனாபதி - ஹர்ப்ரீத் சிங் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிகவும் நிதானமாக விளையாடிய ஹர்ப்ரீத் சிங் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேற, 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த சேனாபதி சிவம் துபே பந்தில் அவுட்டாகினார். இதனால் கேப்டன் ரஜத் பட்டிதர் - வெங்கடேஷ் ஐயர் தலையில் பொறுப்பு விழுந்தது.

இருவரும் அதிரடியில் பொளந்து கட்ட, 13வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 17 ரன்களில் வெளியேறினார். இருந்தாலும் அதிரடியை தொடர்ந்த ரஜத் பட்டிதர் 28 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கடைசி வரை களத்தில் நின்ற ரஜத் பட்டிதர் 40 பந்துகளில் 82 ரன்களை விளாசி அசத்தினார். இறுதியாக 20 ஓவர்களில் மத்திய பிரதேசம் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

இதன்பின் மும்பை அணி தரப்பில் பிரித்வி ஷா - ரஹானே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதில் பிரித்வி ஷா 10 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் சூர்யகுமார் யாதவ் - ரஹானே கூட்டணி இணைந்து மும்பை அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ரஹானே 30 பந்துகளில் 37 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக இளம் வீரர் சூர்யன்ஷ் ஷெட்கே 15 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 36 ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக 2வது முறையாக சையத் முஷ்டாக் அலி தொடரை வென்று மும்பை அணி சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டில் ரஞ்சி டிராபி மற்றும் இராணி கோப்பையை வென்ற மும்பை அணி, தற்போது சையத் முஷ்டாக் அலியை வென்று அசத்தியுள்ளது.

Story first published: Sunday, December 15, 2024, 20:55 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+