Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியிலிருந்து விலகிய ஸ்டார் வீரர்.. வழியனுப்பி வைத்த தோனி.. அடுத்த வருசம் வருவாரா?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வங்கதேச வீரர் ரஹ்மான் பாதியில் விலகி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மினி ஏலத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை எடுத்தது.

நடப்பு சீசனில் பதிரானாவுடன் இணைந்து முஸ்தபிசுர் சிறப்பாக செயல்பட்டார். ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் நல்ல ஒரு செயல்பாட்டையை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே அணிக்காக நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

IPL 2024- Mustafizur Rahman leaves CSK as MS Dhoni gives Heartfelt tribute

இதில் அவருடைய சிறந்த செயல்பாடு 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்ததாகும். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதில் முதல் சீசனில் அவர் 17 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் 2021 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதற்கு பிறகு 2024 ஆம் ஆண்டு தான் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார்.

இந்த சீசனில் மட்டும் அவர் தொடர்ந்து விளையாடி இருந்தால் நிச்சயமாக பர்பில் தொப்பியை கூட வென்றெடுக்க முடியும். அடுத்த ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் வரும் என்பதால் அப்போது முஸ்தபீசுர் ரஹ்மான் சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்பது தெரியாது. இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் முஸ்தஃபிசுர் ரஹ்மானை வழி அனுப்பி வைத்திருக்கிறது.

போகும்போது டோனி தன்னுடைய ஜெர்சியில் கையெழுத்து விட்டு அனுப்பி இருக்கிறார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான், தோனி போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தோனி தமக்கு பல யுக்திகளையும் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

அது என் கிரிக்கெட் வாழ்நாள் முழுவதும் உதவும். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய நினைவுகளை எப்போதும் என் மனதிலே இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இனி விரைவில் கூடிய சீக்கிரம் உங்களுடன் மீண்டும் விளையாடுவேன் என்று நம்புகிறேன் என முஸ்தஃபீசூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 3, 2024, 16:36 [IST]
Other articles published on May 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+