Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொக்கை வீரர்கள் கூட தோனியிடம் வந்தால் அதிரடி காட்டுவது ஏன்? காரணம் இது தான்! நவ்ஜோத் சித்து கருத்து

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மற்ற அணியின் இருக்கும் போது சாதாரண வீரராக அறியப்படும் நபர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியவுடன் எப்படி ஸ்டார் வீரர்களாக உருவெடுக்கிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது.

உதாரணத்திற்கு ஷான் வாட்சன் மோயின் அலி, சிவம் துபே, ரஹானே போன்ற வீரர்கள் எல்லாம் வேறு அணியில் இருக்கும் போது பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய போது அதிரடி வீரராக உருவெடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர்.

IPL 2024 - Navjot singh sidhu reveals How Players Performing well after coming in to csk

இந்த நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். வாய்ப்பு கிடைக்காமல் ஒரு வீரர் இருந்தால் அவருக்கு திறமை இருந்தும் எந்த பயனும் இல்லை. இளைஞர்களுக்கு நீங்கள் அதிக அளவு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் மட்டும் போதாது, அதனை அந்த வீரர் சரியாக பயன்படுத்தி சவால்களை ஒப்புக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும்.

சி எஸ் கே அணியில் தற்போது சமீர் ரிஸ்வி என்ற 21 வயது வீரர் இருக்கிறார். அவருக்கு அதிக அளவு சிஎஸ்கே அணி நம்பிக்கையை வழங்க வேண்டும். சில வீரர்கள் மற்ற அணியில் இருக்கும் போது பலம் குன்றிய வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால் தோனி தலைமை கீழ் வந்தவுடன் முற்றிலும் வேறுபட்ட வீரராக மாறுகிறார்கள். அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

ஏனென்றால் தோனி ஒரு நல்ல தலைவன். அவர் எப்போதுமே ஒவ்வொரு வீரர்களுக்கும் ஆதரவு கொடுப்பார். சோர்வாக இருக்கும் வீரருக்கு நம்பிக்கை கொடுப்பதில் தோனி வல்லவர். ஒரு அண்டா வினிகரை நீங்கள் கொட்டினால் அதில் ஈ அவ்வளவாக மேயாது. ஆனால் சிறு துளி தேனை நீங்கள் கொட்டினால், அதிக அளவு ஈக்கள் மேய்க்கும்.

இதனால் தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் எந்த இடத்தில் சரியாக விளையாடுவார்கள் என்பதை அறிந்து அந்த பொறுப்பை வழங்க வேண்டும். இதுதான் மிகவும் முக்கியம். தோனியை எடுத்துக் கொண்டால் அவர் சிஎஸ்கே அணியின் சொத்து. அவர் பேட்டிங் செய்தால் நிச்சயம் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார்.

தோனியும் ஜடேஜாவும் இணைந்தால் ஒன் பிளஸ் ஒன் 11 என்று மாறிவிடும். அவர்களுடைய பலத்தை இருவரும் இணையும் போது அதிகரித்துக் கொள்கிறார்கள். தோனி அனைத்தையும் சாதித்து விட்டார். அவருக்கு சாதிக்க இனி ஒன்றும் இல்லை. ஒரு நல்ல தலைவருக்கு அழகு, தான் இருக்கும்போது எதிர்கால தலைவர்களை உருவாக்க வேண்டும். அதனைத் தான் தற்போது தோனி செய்கிறார். தற்போது அணியில் இருக்கும் இளைஞர்களின் திறமையை தோனி வளர்த்து விடுவார் என்று நான் நம்புகிறேன்.

தற்போது இருக்கும் மிகப்பெரிய சவாலே, நம்பர் மூன்று அல்லது நான்காவது இடத்தில் விளையாடுவது கிடையாது. கடைசி ஆறு அல்லது ஏழு ஓவர் இருக்கும் போது பேட்டிங் செய்ய களத்துக்கு வருவது தான் மிகப்பெரிய சவால். ஏனென்றால் இந்த நெருக்கடியான கட்டத்தில்தான் உங்களுடைய திறமை சோதிக்கப்படும். இந்த சூழலில் நீங்கள் ஒரு பந்தில் மூன்று டன் எடுக்கிறீர்களா இல்லை ஒரு பண்ணில் இரண்டு ரன் எடுக்கிறீர்களா என்பது தெரிய வரும்.

இப்படி ரன்கள் எடுக்க சில வீரர்களால் மட்டுமே முடியும். நான் மீண்டும் சொல்கின்றேன் டி 20 கிரிக்கெட்டில் பினிஷராக இருப்பது மிகவும் கடினமான காரியம். அப்படி இருந்தும் ஒருவர் பாராட்டுகளை பெறுகிறார்கள் என்றால் நிச்சயம் அவர் திறமையானவர். கீழ் வரிசையில் அப்படிப்பட்ட வீரர்கள் விளையாடும் போது அது அணியில் வெற்றிக்கும் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைகிறது என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 4, 2024, 16:20 [IST]
Other articles published on Apr 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+