For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகமது ஷமிக்கு எதிராக சதி.. கூடவே இருந்து குழி பறித்த என்சிஏ அதிகாரிகள்.. இப்போ நஷ்டம் யாருக்கு?

Mohammed shami : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரிகள் சரியாக கையாளாதது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது சமி அதிக விக்கெட் வீழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்தார்.

இந்த தொடர் முடிந்தவுடன் ஷமிக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அவருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சமி கடைசியாக இந்திய அணிக்காக நவம்பர் மாதம் விளையாடினார். அதன் பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

IPL 2024 - NCA Poor Planning costs Mohammed shami IPL and t20 world cup 2024

ஷமி தொடர்ந்து விளையாடுவதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டதாக பிசிசிஐ கூறியது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரின் போது சமிக்கு காயம் காரணமாக அவர் அந்த தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஷமி தற்போது ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என ஆறு மாதத்திற்கு எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிர்வாகிகள் கூடவே இருந்து குழிபறித்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமிக்கு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தான் லண்டனில் வலி நிவாரணத்திற்காக ஒரு சிறப்பு ஊசி செலுத்தப்பட்டது.

அந்த ஊசி போட்டு ஒரு மாதம் வரை பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பிறகு அடுத்த கட்ட முயற்சியில் இறங்கலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு மாதத்திற்கு பிறகும் சமிக்கு வலி குறையாததால் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி இறுதிவரை ஷமியை சும்மா காக்க வைத்தது ஏன்?

அவருடைய உடல் தகுதியை ஆராய்ந்து அந்த ஊசியை நவம்பர் மாதம் இறுதியிலே செலுத்தி இருந்தால் அவர் இந்நேரம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஐபிஎல் தொடருக்கு திரும்பி இருக்கலாமே? அப்படி ஐபிஎல் தொடரில் முடியவில்லை என்றாலும் டி20 உலக கோப்பை தொடரிலாவது ஷமி விளையாடி இருப்பாரே என்று கிரிக்கெட் நிபுணர்கள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சமீ விஷயத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி அலட்சியமாக இருப்பதால் தற்போது நஷ்டம் ஷமிக்கும் இந்திய அணிக்கும் தான் என்றும் கூறியுள்ளனர். சமியை நவம்பர் மாதம் இறுதியிலே பரிசோதித்து லண்டனில் வலி நிவாரண ஊசியை போட சொல்லாதது ஏன்? இரண்டு மாதம் காலதாமதம் செய்தது ஏன் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. இதனால் முகமது சமிக்கு எதிராக கூட இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் குழி பறித்து விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சாமி அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தற்போது ஆறு மாதம் காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Thursday, February 22, 2024, 15:58 [IST]
Other articles published on Feb 22, 2024
English summary
IPL 2024 - NCA Poor Planning costs Mohammed shami IPL and t20 world cup 2024 முகமது ஷமிக்கு எதிராக சதி.. கூடவே இருந்து குழி பறித்த என்சிஏ அதிகாரிகள்.. இப்போ நஷ்டம் யாருக்கு?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+