Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக், கில் இல்லை! டி20 உலக கோப்பையிலே இடம்பெறாத இவர் தான் அடுத்த கேப்டன்.. EX தேர்வுகுழு தலைவர்

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பல முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக அடுத்த இந்திய அணி கேப்டன் என்று வர்ணிக்கப்பட்ட கில் ரிசர்வ் வீரராகத்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையிலே இடம்பெறாத ஒருவர் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக வர வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார். அது வேறு யாருமில்லை.

IPL 2024 - No Gill and hardik Former chief selectors picks this player as next india captain

கே.கே.ஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், தான் கொல்கத்தா அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார். ஸ்ரேயாஸ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தற்போது கே கே ஆர் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத், புள்ளி விவரங்கள் படி நீங்கள் பார்த்தால் ஸ்ரேயாஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

அவர் இந்திய ஏ அணியை ஒரு முறை வழி நடத்தி சென்றார். எனக்கு தெரிந்து அவருடைய தலைமையில் 10 தொடரில் இந்திய ஏ அணி எட்டு தொடரில் வெற்றி பெற்றது. இந்த எட்டு தொடர்களில் பெரும்பான்மை ஆக ஸ்ரேயாஸ் ஐயர்தான் கேப்டனாக இருந்தார். அவர் கேப்டனாக பல போட்டிகளில் செயல்பட்டு இருக்கிறார்.நான் தேர்வு குழு தலைவராக இருந்தபோது ஸ்ரேயாஸ், அடுத்த கேப்டனாக வளர்க்க பல முயற்சிகளை செய்தேன்.

நான் பதவியில் இருக்கும் போது விராட், ரோகித் சர்மாவுக்கு பிறகு ஒரு இளம் வீரர் கேப்டனாக வரவேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் ஸ்ரேயாஸ் அல்லது ரிஷப் பண்ட் என இரண்டு பெயரை தான் பரிசீலனை செய்தோம். பண்டைய விட ஸ்ரேயாஸ் தான் என் கண்களுக்கு கேப்டனாக திகழ்ந்தார். தற்போது கே கே ஆர் அணியில் அவருடைய செயல்பாடு பார்க்கும்போது, ஒரு தலைவனாக ஸ்ரேயாஸ் நன்றாக முதிர்ந்து வருகிறார்.

கேப்டனாக உங்களுடைய பயணத்தை ஆரம்பிக்கும் போது அணி நிர்வாகம் நல்ல வகையில் அமைய வேண்டும். அதுதான் தற்போது கே கே ஆர் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைக்கிறது. அவர் இன்னும் இளம் வீரராக இருக்கிறார். கே கே ஆர் அணி அவர் மீது இன்னும் பலவற்றை முதலீடு செய்வார்கள். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஸ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக கூட வர வாய்ப்பு இருக்கிறது என்று எம் எஸ் கே பிரசாத் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 7, 2024, 7:02 [IST]
Other articles published on May 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+