Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 42 வயது வீரரான தோனி பிரமாதமாக விளையாடி வருகிறார். எதிர்கொள்ளும் சில பந்துகளில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். தோனியின் ஆட்டத்தை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில் அவருடைய நண்பரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான மேத்யூ ஹைடன் தோனியை அபாயகரமான வீரர் என்று கூறாமல் வேறு ஒரு வீரரை பாராட்டி இருக்கிறார்.

இதை படித்தவுடன் அவர் நிச்சயம் சிவம் துபேவாக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அதுவும் கிடையாது. ஹைடன் பாராட்டி இருப்பது ஒரு வெளிநாட்டு வீரரை. ஆம், சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் 28 வயது வீரரான வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த நிக்கோலஸ் பூரான் 15 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்கள் சேர்த்தார்.

IPL 2024- No MS Dhoni Mathew Hayden Hails this 28 year old as cleanest hitter

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் நிக்கோலஸ் பூரான், நாள் வேகப்பந்து வீச்சு, சுழற் பந்து வீச்சு என இரண்டிலும் அபாரமாக விளையாட முடியும் என பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் தற்போது கிரிக்கெட் உலகத்திலேயே நிக்கோலஸ் புரான் தான் அபாயகரமான வீரர் என்றும் பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய திறமை உடையவர் என்றும் ஹைடன் பாராட்டு இருக்கிறார்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ், ஆடிய விதத்தில் தான் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆடி இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ஹைடன், இதனால் இரு அணிகளும் சரி சமமான அளவில் தான் இருந்தது என்றும், நிக்கோலஸ் பூரான் தான் தன்னுடைய இன்னிங்ஸ் மூலம் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று ஹைடன் பாராட்டியுள்ளார்..

நிக்கோலஸ் பூரான் எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்று தாம் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் கேட்டதாகவும், அதற்கு பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் போட்டியை மாற்றக்கூடிய வீரர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று தாங்கள் நினைத்ததாகவும் அதனை நிக்கோலஸ் பூரான் சிறப்பாக செய்கிறார் என்றும் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது தொடர் போகப் போக கடினமான போட்டிகள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள ஹைடன் ரன்களை சேர்ப்பதும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். இந்த சூழலை சமாளிக்க ஒரு சர்வதேச வீரராக மட்டுமே முடியும் என்றும் அவர்தான் அணியை முன்னேற்றிக் கொண்டு செல்வார் என்றும் ஹைடன் பாராட்டிருக்கிறார்.

Story first published: Thursday, April 25, 2024, 8:01 [IST]
Other articles published on Apr 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+