Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH v PBKS-இது வெற்றிக்கரமான தோல்வி..இந்த 2 பேரும் பிண்ணிட்டாங்க..மிஸ் பண்ணது இங்க தான்- ஷிகர் தவான்

மும்பை : ஐபிஎல் தொடரில் மற்றொரு சுவாரசியமான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பஞ்சாப் சன்ரைசர்ஸ் அணிகள் மோதிய இந்த லீக் ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.

பஞ்சாப் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த நிலையில் அந்த அணியின் இளம் வீரர்கள் சசாங் சின் 25 பந்துகளில் 46 ரன்களும், ஆஸ்டோஷ் சர்மா 15 பந்துகளில் 33 ரன்களும் விளாசினர். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், ஷசாங் மற்றும் ஆஸ்டோஷ் இருவரும் பிரமாதமாக விளையாடினார்கள்.

IPL 2024 - PBKS captain Shikhar dhawan lauds Shashank and Ashutosh for brillaint batting

நாங்கள் சன்ரைசர்ஸ் அணியை ஒரு நல்ல இலக்கில் கட்டுப்படுத்தினோம் என்று நினைத்தேன். ஆனால் எங்களால் முதல் 6 ஓவர்களில் சரியாக விளையாட முடியவில்லை. அங்கு தான் நாங்கள் போட்டியில் கோட்டையை விட்டு விட்டோம். சன்ரைசர்ஸ் எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்கள்.
மேலும் ஆடுகளத்தில் பந்தின் பவுன்சும் பெரிய அளவில் இல்லை.

எனவே எங்கள் அணியின் ஒவ்வொரு வீரர்களும்,ஒவ்வொரு திட்டத்தை வகுத்துக் கொண்டு விளையாடத் தொடங்கினார்கள். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தவுடன் எங்களுடைய பேட்டிங் ஸ்டைலை வீரர்கள் மாற்றினார்கள். கடைசி கட்டத்தில் ஒரு கேட்சை தவற விட்டோம். நாங்கள் ஒரு பத்து, பதினைந்து ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம்.

இதுதான் இந்தப் போட்டியின் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை என்று தான் நினைக்கின்றேன். தொடக்க வீரர்கள் உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். ஆஸ்டோஸ் மற்றும் ஷாசாங் ஆகிய இரண்டு வீரர்கள் தொடர்ந்து வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்று நம்புகிறோம். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பினோம். ஆனால் இவ்வளவு நெருக்கத்தில் போட்டியை வந்து முடித்தது மிகப்பெரிய சாதனை என்று நினைக்கின்றேன். இந்த தோல்வியில் இருந்து எங்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறது. அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை காண வேண்டும் என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 10, 2024, 0:02 [IST]
Other articles published on Apr 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+