Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - தப்பித்தது ஆர்சிபி! தொடரிலிருந்து வெளியேறிய பஞ்சாப்.. கோலி, சிராஜ் உலக தரமான ஆட்டம்!

பெங்களூரு: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் எதிரான 58வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐபிஎல் தொடரை விட்டு பஞ்சாப் அணி வெளியேறியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, முதலில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பிறகு அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார்.

IPL 2024 - PBKS Knocked out as RCB won by 60 runs

கேப்டன் டுபிளசிஸ் ஒன்பது ரன்களிலும், வீல் ஜேக்ஸ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இருக்க மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோலி 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதேபோன்று கடந்த சில மாதங்களாக பார்மில் இல்லாமல் தவித்த ரஜத் பட்டிதார் கடந்த சில போட்டிகளாக அதிரடியாக விளையாடி வருகிறார்.

இன்றைய ஆட்டத்திலும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அவர் பொளந்தார். 6 சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகள் என விரட்டிய ரஜத் பட்டிதார் 21 பந்துகள் எல்லாம் அரை சதம் கடந்தார். இந்த நிலையில் விராட் கோலியின் இன்னிங்ஸ் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பலரும் விமர்சித்த நிலையில்,அதற்கு விராட் கோலி இன்று பதிலடி கொடுத்தார்.

அரைசதம் கடந்த பிறகு விராட் கோலி பேயாட்டம் ஆடினார். அடுத்த 15 பந்துகளில் விராட் கோலி 42 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் 47 பந்துகளில் கோடி 92 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். விராட் கோலி 17.4 வது ஓவரில் எல்லாம் ஆட்டம் இழந்துவிட்டார். ஒரு வேலை அவர் கடைசி வரை நின்றிருந்தால் 150 ரன்கள் சேர்த்திருப்பார்.

55 ரன்கள் வெளியேற கேமரன் கிரீன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். இறுதியில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஏழு பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார்கள். இதில் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரி மடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக இருந்தது. தொடக்க வீரர் சிம்ரன் சிங் 6 ரன்களிலும், ஜானி பாரிஸ்டோ 27 ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். எனினும் ரூசோவ் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

ரூசோவ் ஆர் சி பிக்கு வேட்டு வைக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய கட்டத்தில் ஆர்சிபி அவருடைய விக்கெட்டை வீழ்த்தியது. இதேபோன்று அதிரடியாக விளையாடிய விராட் கோலியின் அபாரமாக செயல்பாட்டார். அவர் 19 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

இதேபோன்று ஜித்தேஷ் சர்மா , லிவிங் ஸ்டோன் ஆஸ்டோஷ் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற பஞ்சாப் அணியின் தோல்வி உறுதியானது. கேப்டன் ஷாம்கரன் மட்டும் 22 ரன்கள் சேர்த்தார். இதனால் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 181 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருந்து பஞ்சாப் அணி வெளியேறியது.

Story first published: Friday, May 10, 2024, 0:03 [IST]
Other articles published on May 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+