For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பந்தில் 2 விக்கெட்! சிவம் துபே மீண்டும் டக் அவுட். CSK-வை கதறவிட்ட பஞ்சாப்! ராகுல் சாஹர் அபாரம்

தர்மசாலா : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி பத்து போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

அதே சமயம் தோல்வியை தழுவினால் சி எஸ் கே வின் வாய்ப்புக்கு பாதகமாக பல சூழல்கள் ஏற்படும். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஐந்து முறை பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவி இருக்கிறது. மும்பை போன்ற பல பலமான அணிகளை கதறவிட்ட சிஎஸ்கே அணி பஞ்சாப் இடம் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.

IPL 2024 PBKS vs CSK - Rahul Chahar picks two wickets in two balls as shivam dube got golden duck

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தர்மசாலாவில் சிஎஸ்கே அணி மீண்டும் பஞ்சாப்பை எதிர்கொண்டது. தொடக்க வீரராக களமிறங்கிய ரஹானே ஒன்பது ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சிஎஸ்கே அணி மிகப்பெரிய ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் சாஹர் வீசிய பந்தில் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிரடியாக விளையாடி வந்த சிஎஸ்கே வீரர்களை அடுத்தடுத்து ராகுல் சாஹர் வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் ஏழாவது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். அப்போது அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் அவருடைய பந்து வீச்சில் வெளியேறினார்.

இதனை அடுத்து சிவம் துபே களமிறங்கினார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணில் இடம் பிடித்த பிறகு சிவம் துபே பஞ்சாப் அணிக்கு எதிராக டக் அவுட் ஆனார். இந்த நிலையில் மீண்டும் பஞ்சாப்க்கு எதிராக பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் துபே களம் இறங்கினார். ஆனால் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் மூலம் நடப்பு சீசனில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சிவம் துபே டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி 69 ரன்களில் ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த போது இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Story first published: Sunday, May 5, 2024, 16:44 [IST]
Other articles published on May 5, 2024
English summary
IPL 2024 PBKS vs CSK - Rahul Chahar picks two wickets in two balls as shivam dube got golden duck 2 பந்தில் 2 விக்கெட்! சிவம் துபே மீண்டும் டக் அவுட். CSK-வை கதறவிட்ட பஞ்சாப்! ராகுல் சாஹர் அபாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+