Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை கிண்டல் செய்த பஞ்சாப் வீரர்.. திருப்பி பதிலடி கொடுத்த ருதுராஜ்.. ஒரு ஓவரில் 19 ரன்கள் விளாசல்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ், பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்த சம்பவம் ரசிகர்களிடையே கவர்ந்திருக்கிறது. சென்னை அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் ஏழாம் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

பெரிய பெரிய அணிகளை எல்லாம் தூக்கிப்போட்டு விளாசிய சிஎஸ்கே அணி பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் தொடர்ந்து ஐந்து முறை தோல்வியை தழுவி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

IPL 2024 PBKS vs CSK - Ruturaj and daryl mitchell hits 19 runs in single over

இந்த நிலையில் கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கேக்கு எதிராக பந்து வீசிய சுழற் பந்துவீச்சாளர் ஹர்பிரித் பிரார் அபாரமாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். யார் என்றே தெரியாத நிலையில் சிஎஸ்கேக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய போது தோனியை கிண்டல் செய்யும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

தோனிக்கு பந்து வீசும் போது தான் நார்மலாக தான் உணர்ந்தேன் என்று கூறினார். இது தோனியை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சிஎஸ்கே ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பஞ்சாப் பணியை தர்மசாலாவில் சிஎஸ்கே எதிர்கொள்ளும் சூழல் வந்தது. அப்போது சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 5 ஓவர் முடிவில் 41 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்தனர்.

அப்போது ஹர்பிரித் பிரார் பந்துவீச வந்தார். அவரை பார்த்த பிறகு சிஎஸ்கே வீரர்கள் அதிரடியாக விளையாட தொடங்கினர். அந்த ஓவரில் ருதுராஜ், ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி, ஒரு சிங்கிள்ஸ் எடுத்தார். டேரல் மிட்செல் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். இதன் மூலம் ஹர்பிரித் பிரார் வீசிய முதல் ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 41 ஓவரில் இருந்து 60 ரன்களுக்கு சென்றது. இதனால் பிரார் கடும் நெருக்கடிக்கு ஆளானார். ஹர்பிரித் பிராருக்கு அதன் பிறகு பஞ்சாப் அணி கேப்டன் சாம்கரன் ஓவர் வழங்கவில்லை. தோனியை மறைமுகமாக கிண்டல் செய்தவர்களுக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Story first published: Sunday, May 5, 2024, 17:26 [IST]
Other articles published on May 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+