Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள்.. சிஎஸ்கே வெற்றி சதவீதம் பற்றி வெளியான STATS

சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் இன்னும் எட்டு போட்டிகளே மீதம் உள்ளன. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்த வெற்றி சதவீத கணக்கு வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி சதவீதம் அதிகரித்து உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 98 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது. அந்த அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடிய எட்டு வெற்றிகளை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. அதில் ஒரு பெரிய வெற்றி பெற்றால் கூட அந்த அணி தகுதி பெற்று விடும்.

IPL 2024 Play-off chance Chennai Super Kings have a 65 percent chance to reach play-offs


அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 81 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது. அந்த அணிக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. அந்த அணியும் ஒரு போட்டியில் பெரிய வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 சதவீத வெற்றி வாய்ப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி மோத உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். எனவே, அந்த ஒரு போட்டியை வைத்து தான் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 26 சதவீத வெற்றி வாய்ப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. லக்னோ அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. ஆனாலும், அந்த அணியின் நெட் ரன் ரேட் (-0.769) மிக மோசமாக இருப்பதால் அந்த அணி இரண்டு போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினமே.

ஆறாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 சதவீத வெற்றி வாய்ப்புடன் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது குறைந்தது 11 பந்துகள் மீதம் உள்ள நிலையில் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
அப்படி நடந்தால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 6 சதவீத வெற்றி வாய்ப்பும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 4 சதவீத வெற்றி வாய்ப்பும் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் மிகவும் பின்தங்கி இருப்பதால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இல்லை.

2024 ஐபிஎல் தொடரில் அணிகளின் பிளே ஆஃப் சுற்று வெற்றி வாய்ப்பு (62வது லீக் போட்டியின் முடிவில்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - தகுதி பெற்று விட்டது

ராஜஸ்தான் ராயல்ஸ் - 98% வெற்றி வாய்ப்பு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 81% வெற்றி வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் - 65% வெற்றி வாய்ப்பு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 26% வெற்றி வாய்ப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 20% வெற்றி வாய்ப்பு

டெல்லி கேப்பிட்டல் - 6% வெற்றி வாய்ப்பு

குஜராத் டைட்டன்ஸ் - 4% வெற்றி வாய்ப்பு

பஞ்சாப் கிங்ஸ் - தகுதியை இழந்து விட்டது

மும்பை இந்தியன்ஸ் - தகுதியை இழந்து விட்டது

Story first published: Monday, May 13, 2024, 10:42 [IST]
Other articles published on May 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+