Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024: பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லப் போகும் 4 அணிகள்.. வெளியான STATS.. அப்ப சிஎஸ்கே?

சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று அதன் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது இரண்டு அணிகளைத் தவிர மற்ற எட்டு அணிகளும் 11 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. அந்த அணிகளுக்கு தலா மூன்று லீக் போட்டிகள் மீதம் உள்ளன.

ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு மட்டுமே நான்கு லீக் போட்டிகள் மீதம் உள்ளன. இந்த சூழ்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் எந்த அணியும் தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை.

IPL 2024 Play-Off chance Will Chennai Super Kings move to play-off

அனைத்து அணிகளுக்குமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சிறிய வாய்ப்பு உள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதை தவிர்த்து மற்ற ஒன்பது அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

தற்போது இது குறித்த பிளே ஆஃப் முன்னேற எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்ற புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. அது இங்கே -

ராஜஸ்தான் ராயல்ஸ் - 99%.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 98%.
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - 75%.
சென்னை சூப்பர் கிங்ஸ் - 60%.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 50%.
டெல்லி கேபிடல்ஸ் - 12%.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3%.
பஞ்சாப் கிங்ஸ் - 2%.
குஜராத் டைட்டன்ஸ் - 1%.
மும்பை இந்தியன்ஸ் - 0%.

அதன் படி ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் தங்களுக்கு மீதம் இருக்கும் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றால் மிக உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். அடுத்து இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். இந்த அணிகள் தங்களின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இதில் குறிப்பாக லக்னோ - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் வெல்லும் அணிக்கே பிளே ஆஃப் வாய்ப்பு அதிகம். சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளிலும் வென்று, அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தால் உறுதியாக பிளே ஆஃப் செல்ல முடியும்.

தற்போது புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்கு கீழே இருக்கும் அணிகளில் டெல்லி அணிக்கு மட்டுமே ஓரளவு வாய்ப்பு உள்ளது. அந்த அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதம் உள்ளன. அந்த மூன்றிலும் வென்றால் அந்த அணியால் 16 புள்ளிகளை பெற முடியும். அதன் மூலம் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இதை தவிர்த்து பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுக்கு மிக மிக குறுகிய வாய்ப்பே உள்ளது.

Story first published: Monday, May 6, 2024, 11:21 [IST]
Other articles published on May 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+