Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024: பிளே ஆஃப் அட்டவணை.. SRH, RCB அணியுடன் மோதப் போவது யார்? முழு விவரம்

அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முழுவதும் முடிந்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் பிளே ஆஃப் சுற்று துவங்க உள்ளது.

இந்த பிளே ஆஃப் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்று இருக்கும் அணிகள் முதல் தகுதிப் போட்டியில் (Qualifier 1) விளையாடும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். தோல்வி அடையும் அணி இரண்டாவது தகுதிப் போட்டியில் (Qualifier 2) பங்கேற்கும்.

IPL 2024 Play-Off Schedule Which team will face RCB and SRH in play-offs

இதற்கு அடுத்து தகுதி நீக்கப் போட்டி (Eliminator) நடைபெறும். அதில் புள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ள அணிகள் மோதும். அந்தப் போட்டியில் தோற்கும் அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிவிடும். தகுதி நீக்கப் போட்டியில் வெற்றி பெறும் மணி இரண்டாவது அணி தகுதி போட்டிக்கு முன்னேறும்.

முதல் தகுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியும், தகுதி நீக்கப் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் இரண்டாவது தகுதிப் போட்டியில் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

அந்த வகையில் தற்போது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முதல் தகுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டி மே 21 அன்று நடைபெற உள்ளது. அடுத்து மே 22 அன்று தகுதி நீக்கப் போட்டி நடைபெற உள்ளது. அதில் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. அடுத்து இரண்டாவது தகுதிப் போட்டி மே 24 அன்று நடைபெற உள்ளது. மே 26 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு துவங்கும்.

2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் அட்டவணை -

மே 21 - முதல் தகுதிப் போட்டி (Qualifier 1) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் X சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - இடம்: அகமதாபாத்

மே 22 - தகுதி நீக்கப் போட்டி (Eliminator) - ராஜஸ்தான் ராயல்ஸ் X ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இடம்: அகமதாபாத்

மே 24 - 2வது தகுதிப் போட்டி (Qualifier 2) - முதல் தகுதிப் போட்டி தோல்வியாளர் X தகுதி நீக்கப் போட்டி வெற்றியாளர் - இடம்: சென்னை

மே 26 - இறுதிப் போட்டி - முதல் தகுதிப் போட்டி வெற்றியாளர் X 2வது தகுதிப் போட்டி வெற்றியாளர் - இடம்: சென்னை

Story first published: Monday, May 20, 2024, 15:47 [IST]
Other articles published on May 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+